இலங்கை திட்டமிடல் சேவை தரம் 111 ற்கு 3 முஸ்லிம்கள் தெரிவு
(ஏ.எல்.ஜுனைதீன்)
இலங்கை திட்டமிடல் சேவை தரம் 111 ற்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் மூன்று முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர். டி.எம் ரிஹான், எம்.எம்.எம்.ஷப்ரி, எம் சஜீரா ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களாவர்.
அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் (PUBLIC SERVICE COMMISSION) தெரிவு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ள 120 பேர்களில் தமிழ், முஸ்லிம் என 4 பேர் மட்டுமே தெரிவாகியிருக்கின்றனர். பி.ராஜ்வினோத் என்பவரே தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழராகும்.
பட்டியலில் டி.எம் ரிஹான் 19 ஆவதாகவும், எம் சஜீரா 35 ஆவதாகவும் பி.ராஜ்வினோத் 91 ஆவதாகவும் எம்.எம்.எம்.ஷப்ரி 98 ஆவதாகவும் பட்டியலிடப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் எதிர்வரும் 2013.07.15 ஆம் திகதியிலிருந்து சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என ஆனைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
.jpg)
Post a Comment