Header Ads



ஜமாத் இ இஸ்லாம் கட்சியின் செயலாளருக்கு மரண தண்டனை

வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப்போர் நடந்தபோது பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் ஈடுபட்ட ஜமாத் இ இஸ்லாம் கட்சியின் தலைவர் குலாம் அசாம் உள்பட பலர் மீது மனித குலத்திற்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனை விசாரித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் குலாம் ஆசாதுக்கு 90 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்பளித்தது. இதன் காரணமாக வங்கதேசத்தில் மூன்று நாட்களாக பந்த் நடந்து வருகிறது. பல இடங்களில் கலவரம் வெடித்தது. 

இந்நிலையில் இன்று ஜமாத் இ இஸ்லாம் கட்சியின் பொது செயலாளர் அலி அசன் முகமத் முஜாகித்(65) மீதான குற்ற விசாரணையில் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அலி அசன் மீது போரின் போது கடத்தல், கொலை, சித்திரவதை, கலவரத்தை தூண்டியது போன்ற 7 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன.  இதனை விசாரித்த தீர்ப்பாயம் 5 குற்றங்களில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. 

இவர் எதிர்கட்சியான வங்கதேச தேசியக் கட்சியின் தலைவர். இவர் கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை கலிதாசியா அரசில் மந்திரியாக பதவிவகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.