Header Ads



கடலில் நீந்திய சிறுமியை கடித்துத் துண்டாக்கிய சுறாமீன்

இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் நாடு உள்ளது. அங்குள்ள ரீயூனியன் தீவில் பிரான்சை சேர்ந்த 15 வயது சிறுமி விடுமுறையை கழிக்க அங்கு வந்திருந்தாள். அவளது தந்தை அங்குள்ள செயிண்ட் பால் என்ற இடத்தில் படகு கிளப்பின் பொறுப்பாளராக பணிபுரிகிறார்.

சம்பவத்தன்று அந்த சிறுமி ரீயூனியன் தீவின் செயிண்ட் பால் பகுதி கடலில் தனது தங்கையுடன் குளித்து கொண்டிருந்தாள்.

அப்போது, அவளை ஒரு சுறா மீன் தாக்கியது. பின்னர் உடலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அதை பார்த்ததும் சிறுமியின் தங்கை கூச்சலிட்டாள். உடனே நீர்மூழ்கி ஊழியர்கள் கடலுக்குள் குதித்து அவளை மீட்டு வந்தனர்.

அதற்குள் அச்சிறுமி உயிரிழந்தாள். கடலுக்குள் இழுத்து சென்ற சுறா மீன் அவரது உடலை இரு துண்டாக்கி கொடூரமாக்கியது.

கடந்த மே மாதம் ரீயூனியன் தீவில் தேனிலவை கொண்டாட வெளிநாட்டை சேர்ந்த 36 வயது வாலிபர் வந்திருந்தார். பிரிசன்ட்ல்டி செயின்ட்– கில்ஸ் கடலில் குளித்த அவரை சுறா மீன் தாக்கி கொன்றது.

No comments

Powered by Blogger.