வாஸ் குணவர்த்தனவின் மனைவிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர், வாஸ் குணவர்த்தனவின் மனைவியான சியாமலி ப்ரியதர்ஷனி பெரேரா கொழும்பு மேலதிக நீதவானினால் இன்று எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி வர்த்தகரான மொஹமட் சியாம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்தமை தொடர்பான, சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் கொடுத்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை, கடந்த 25 ஆம் திகதி இடம் பெற்ற போது, சியாமலி ப்ரியதர்ஷனி பெரேராவை ஜூலை மாதம் 9 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஏ எம் சஹாப்தீன், உத்தரவிட்டிருந்தார்
எனினும், அவரது சட்டத்தரணி அஜித் பத்திரன அவரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக மனு ஒன்றின் மூலம் அறிவித்திருந்தார்.
9 ஆம் திகதி அவருக்கு நீதிமன்றில் முன்னிலையாக முடியாததன் காரணமாகவே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலோ, அழுத்தமோ கொடுக்க கூடாது என முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனைவிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Sfm

Post a Comment