Header Ads



கல்முனை இஸ்லாமாபாத்தில் 'திரிதரு பியச' சிறுவர் வள நிலையம் திறந்துவைப்பு


(அகமட் எஸ். முகைடீன்)

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் கல்முனை இஸ்லாமாபாத்தில் “திரிதரு பியச” சிறுவர் வள நிலையம் திறந்துவைக்கும் நிகழ்வு இன்று (04.07.2013) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் இவ்வள நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

இவ்வள நிலையத்தில் ஆங்கிலம், கனணி போன்ற பயிற்சிநெறிகளும் பொழுதுபோக்கு, உடற்பயிற்சி சாதனங்களும் காணப்படுகின்றன. இவ்வள நிலையத்தினை பாடசாலை கல்வி நேரம் தவிர்ந்த மாலைவேளைகளிலும் பயன்படுத்தி பயன்பெற முடியும்.   
  
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தவிசாளர் அனோமா திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, நிர்வாக உத்தியோகத்தர் அலாவூடீன், கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.அபுல் ஹசன், கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், மாவட்ட சமூக உள நல உத்தியோகத்தர் யு.எல்.அசாறுடீன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.