Header Ads



மகர நீதிமன்றத்தில் பெண் நடாத்திய நாடகம் - நீதிபதி முன் அம்பலம்

(Hafeez)

ஊமைப் பெண் மறதி காரணமாகப் பேசிய சம்பவம் ஒன்று மகர நீதிமன்றில் (9.7.2013) இடம் பெற்றுள்ளது.

மகர நீதவான் தர்சிகா விமலசிரி முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் வேபட என்ற இடத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மற்றைய பெண்கள்  சிலரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார் என்ற குற்றச் சாட்டில் கைதாகி இருந்தார்.

மாஜிஸ்திரேட் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் மறதி  காரணமாக வாய் திறந்து பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து ஊமைப் பெண்ணால் எப்படிப் பேச முடிந்தது என்பதை விசாரித்த போது தான் மறதியாகப் பேசி விட்டதாகவும் நீதிமன்றை பிழையாக வழி நடத்திய தாகவும் சந்தேக நபர் ஒத்துக் கொண்டுள்ளார்.

இதனை அடுத்து சந்தேக நபரான விமுக்தி நதிசான் என்ற பெண்ணுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த நீதவான் ஒரு இலட்ச ரூபா சரீரப் பிணை மற்றும் 25 000 ரூபா ரொக்கப் பிணையும் வழங்கினார். வழக்கு நவம்பர் மாதம் 10ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜராகும்படி பணித்தார்.


2 comments:

  1. இது என்ன அதிசயம்?

    நடிப்பு ஊமை பேசியது அதிசயம் என்றால், முஸ்லீம்கள் நமது மசூதிகள் தாக்கப்பட்டபோது பேசக்கூடிய நமது அரசியல் கனவான்களெல்லாம் ஊமைகளாக நடித்தபடி இருந்தார்களே அது மட்டும் அதிசயமில்லையா என்ன?

    ReplyDelete
  2. கோமடி பீஸ்கள்தான் வேறென்ன. செய்றதே ஊத்தைத்தொழில் அதில் சர்வதேச லெவல்ல மாறுவேசம், மறமண்டைக்கேற்றமாதிரிதான் நடக்கணும் இல்லையென்றால் இதுபோலதான் நடக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.