இலங்கையில் பொலிஸ் காணி அதிகாரங்களைப் பரவலாக்குவதில் சிக்கல் - மஹிந்த
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று (09) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி செயலத்தில் சந்தித்து உரையாடினார்.
இருவருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது- இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் மாற்றங்கள் கெண்டுவருவது தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமே ஒரு சிறந்த முடிவை எடுக்க முடியும் என்பதை ஜனாதிபதி சிவசங்கர் மேனனுக்கு சுட்டிக்காட்டினார்.
இலங்கையைப் போன்ற ஒரு சிறிய நாட்டில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பரவலாக்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பற்றியும் ஜனாதிபதி விளக்கமளித்தார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதோடு கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ள இந்தியா வற்புறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இச்சந்திப்பில் இந்தியப் பிரதமரின் செயலக பணிப்பாளர் மனுமகவர் -இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே. சிங்க-உதவி உயர் ஸ்தானிகர் பி. குமரன்- இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்- அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ-டக்ளஸ் தேவானந்த- வாஸ் குணவர்தன- ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்

முஸ்லிம் காங்கிரசிடம் சிவசங்கர் மேனன் இவ்வாறுதான் கூறினார் என்றே வைப்போம். அப்படியானால், இதே மேனன் நம்ம ஜனாதிபதியை சந்தித்தபோது, ஜனாதிபதின் வேண்டுகோளுக்கு ஒன்றும் அந்த மேனன் சொல்லவில்லையே!!!! ஜனாதிபதி சொன்ன எல்லாவற்றுக்கும் ஆமாம் என்றுதானே இந்த மேனன் சொல்லி இருக்கின்றார். இரண்டு சந்திப்புக்கள் பற்றிய தகவல் ஒன்றுக்கொன்று முரன்படுகின்றதே......
ReplyDeleteஆக, எமது கருத்து, 13 இல் மாற்றம் செய்வதில் அரசு உறுதியாக உள்ளது... ஆனால் இந்தியாவால் அதை தடுக்கவும் முடியாது..... காரியம் நடக்கும் வரை பொறுத்திருந்து பாருங்கள்....