கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக ஏற்பாட்டில் உயிரை காப்போம் இலவச சிகிச்சை முகாம்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு- காத்தான்குடி நகர சபையின் அனுசரனையுடன் ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலை மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஏதிர்காலத்தில் இருதய நோய் ஏற்படுவதை தடுப்பதன் மூலம் உயிர்களை காத்தல் எனும் தொனிப்பொருளில் உயிரை காப்போம் -இலவச சிகிச்சை முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மீரா பலிகா வித்தியாலய தேசிய பாடசாலை மண்டபத்தில் ஆசிரி சேர்ஜிகல் வைத்தியசாலையின் பிரபல வைத்திய நிபுணர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இங்கு இரத்த அழுத்த பரிசோதனை, நீரிழிவு,உடல் பருமன் பரிசோதனை ,ஈ.சி.ஜி. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் பெரும் திரளான ஆண்கள் ,பெண்கள் கலந்து கொண்டு இவ் வைத்திய முகாமில் வைத்திய சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment