அல்- மஃஹதுல் இஸ்லாமி (அல்-குர்ஆன் மத்ரஸா) மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம்
(பி.எம்.எம்.ஏ.காதர்)
பெரிய நீலாவணை அக்பர் கிராம அல்- மஃஹதுல் இஸ்லாமி (அல்-குர்ஆன் மத்ரஸா) மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு வைபவம் அண்மையில் அக்பர் கிராம மஸ்ஜிதுல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. இவ்வைபவம் மத்ரஸா நிர்வாகி வை.எல்.எம்.பாறூக் தலைமையில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் மருதமுனை இஸ்லாமிய பிரசார மையத்தின் தலைவரும்,மருதமுனை தாருல் ஹுதா அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் மதனி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்த மத்ரஸாவில் ஒரு வருடத்திற்குள் புனித அல்-குர்ஆனை ஓதி முடித்த மாணவி நூறுல் அமீன் பாத்திமா மெஹருக்கு பிரதம அதிதி பெறுமதி மிக்க தங்க மோதிரத்தை அணிவித்து கௌரவித்தார். மேலும் 50க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.


Post a Comment