மட்டக்களப்பு சிறைச்சாலையில் முஸ்லிம் கைதிகளுக்கு விஷேட ஏற்பாடுகள்
(ஜூறைஸ்)
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள முஸ்லிம் சிறைக்கைதிகளுக்கு புனித றமழான் நோன்பினையொட்டி விஷேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நலன்புரி அதிகாரி கே.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
சிறைச்சாலை நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாயிலுடன் இணைந்து மட்டக்களப்பு வர்த்தக நலன்புரி அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்ள்ளது.
இப்தார் நிகழ்வு அதனை தொடர்ந்து ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாயல் பிரதம இமாமினால் தறாவீஹ் தொழுகை அதேபோன்று ஸஹர் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இச்சிறைச்சாலையில் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள 55 முஸ்லிம் கைதிகள் சிறைவாசம் அனுபவிப்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment