இறுதிக்கட்டப் போரில் பங்காற்றியவர்களுக்கு ஜனாதிபதியினால் உயர்விருதுகள்
இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், பிரிகேடியர் ரவிப்பிரிய மற்றும் அடுத்த இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உயர் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் மனிதாபிமானப் இறுதிக்கட்டப் போரில் பங்கேற்ற, உயிரிழந்த படையினருக்கு விருதுகளை வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் 216 படை அதிகாரிகளுக்கு வீர விக்ரம விபூசணய விருது, ரணவிக்கிரம பதக்கம் என்பன வழங்கப்பட்டன. வீர விக்ரம விபூசணய விருது இராணுவத்தைச் சேர்ந்த, மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், மற்றும் பிரிகேடியர் ரவிப்பிரிய ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வீரவிக்ரம விபூசணய விருது படையினருக்கு வழங்கப்படும், மூன்றாவது உயர் விருதாகும். இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, விமானப்படைத் தளபதி எயர் மார்சல் ஹர்ச அபேவிக்கிரம, ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க உள்ளிட்டோருக்கு ரண விக்ரம பதக்கங்கள் வழங்கப்பட்டன.
நேற்றைய நிகழ்வில் இராணுவத்தைச் சேர்ந்த 147 அதிகாரிகளுக்கும், கடற்படையைச் சேர்ந்த 43 அதிகாரிகளுக்கும், விமானப்படையைச் சேர்ந்த 26 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இறுதிப் போரில் பங்கேற்ற சிறிலங்காப் படையினரில், 19,158 பேருக்கு கௌரவ விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இவர்களில், 156 படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு வீர விக்ரம விபூசணய விருதும், 2232 படையினருக்கு ரணவிக்ரம பதக்கமும், 16,770 படையினருக்கு ரணசூர பதக்கமும் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த உயர் விருதுகள் பெறுவதற்கு நாங்கு வருடங்கள் ஆகிவிட்டன இதுவரைக்கும் ஜனாதிபதி ஏனோ இவர்களுக்கு இந்த விருதை வழங்கவில்லை. இனிமேல்தான் இதுபோன்ற காரியங்களைச்செய்து மக்கள் மனதை வெல்லவேண்டியுள்ளது. யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கு கழத்தில் நின்று யுத்தம் செய்த படைத்தளபதிகளுக்கு யுத்தம் வெற்றி பெற்ற உடனேயே அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படும் ஆனால் நமது நாட்டில் யுத்தம் முடிந்த கையுடன் ஜனதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் மிக மிக பிசியாக இருந்ததனால் இவர்களைக்கவனிக்கை நேரமில்லாமல் இருந்திருக்கும்.
ReplyDeleteHow many times are they rewarded? My be because of the forthcoming election work
ReplyDelete