வேட்பாளர் பட்டியலுடன் சொத்து விபரமும் சமர்ப்பிக்க வேண்டும்
வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினது சொத்துகள் பற்றிய விபரங்களையும் வேட்பாளர் பட்டியலுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட விரும்பும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில்இ வடக்குஇ வடமேல்இ மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினதும்இ சொத்து விபரப்பட்டியல் வேட்பாளர் பட்டியலுடன் சேர்த்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவோர் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்பது சட்டமாக இருக்கிறது.
இருந்தாலும்இ வேட்பாளர் பட்டியலுடன் சேர்த்தே சொத்து விபரங்களும் சமர்ப்பிக்கப்பட்டால்இ அதை அதிகாரிகள் கையாள்வது சுலபமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
.jpg)
நல்லவிடயம்தான் இதை ஆரம்பத்திலிருந்து சரியாக கடைப்பிடித்தீர்களா? கண்காணித்தீர்களா? பொதுத்தேர்தலிலும் செய்திருந்தீர்களா மறந்துவிட்டீர்கள்...
ReplyDelete