இலங்கையில் வாழும் சகல முஸ்லிம்களும் சிங்களவர்களின் உறவினர்களே - ராஜித
(மர்லின் மரிக்கார்)
இலங்கையில் வாழும் சகல முஸ்லிம்களும் சிங்கள மக்களின் உறவினர்களே என்று கடற்றொழில், நீரியல் வளத் துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அளுத்கம, சீனவத்தை ஜும்ஆ பள்ளிவாசலைத் திறந்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இன்று நமக்கு மிகவும் சந்தோஷமான நாள். அளுத்கம சீனவத்தை ஜும்ஆ பள்ளி வாசலை எமது ஜனாதிபதி திறந்து வைத்திருக்கின்றார். இதேபோல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி நுவரெலியா பள்ளிவாசலையும் ஜனாதிபதி அன்று திறந்து வைத்தார். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. பேருவளை தொகுதி என்பது சிங்கள – முஸ்லிம் சகோதரத்துவத்தின் தலைமையகமாகும். கடந்த காலங்களில் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் எதுவுமே பேருவளை தொகுதியில் இடம்பெறவில்லை. இன்று சிங்கள – முஸ்லிம் மக்கள் ஒரே சகோதரர்கள் போன்று கை கோர்த்து வாழுகின்றார்கள். இனவாதத்திற்கும், மத வாதத்திற்கும் எதிராக நாம் தலைமைத்துவம் வழங்கி சகோதரர்கள் போன்று இத்தொகுதியில் வாழ்ந்து வருகின்றோம். கடந்த காலத்தில் எதுவிதமான பிரிவுக்கும் நாம் இடமளிக்க வில்லை.
அண்மையில் சப்புகொட விகாரையை திறந்து வைப்பதற்கு நீங்கள் பிரதம அதிதியாக வந்தீர்கள். அதற்கு முஸ்லிம் சகோதரர்கள்தான் பெரிதும் பங்களிப்பு செய்தார்கள். பேருவளை நகர சபைத் தலைவரான மில்பர் கபூரும், பேருவளை முஸ்லிம் வர்த்தகர்களும் இணைந்து ஒத்துழைப்பு நல்கித்தான் சப்புகொட விகாரை தற்போதைய நிலைக்கு அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றது. இதேபோல் பேருவளை மங்கள விகாரையும் அபிவிருத்தி செய்யப்பட்டது.
அந்த வகையில் சீனவத்தை ஜும்ஆ பள்ளிவாசலை இந்த நிலைக்கு அபிவிருத்தி செய்து திறந்து வைக்கும் வைபவத்தை சிறப்பான முறையில் பேருவளை பிரதேச சபைத் தலைவர் பிரசன்ன சன்ஜீவ தலைமையிலான சிங்கள சகோதரர்களே ஏற்பாடு செய்தனர். இது தான் எங்களுக் கிடையிலான சகோதரத்துவ பிணைப்பு.
நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் தான் பிறந்தோம். அதன் பின்பே மதமும், இனத்துவ அடையாளமும் எமக்கு கிடைக்கின்றது.
முஸ்லிம்கள் பேருவளைத் துறைமுகத்தின் ஊடாகவே இலங்கைக்கு வந்தார்கள். இது தான் முஸ்லிம்களின் பூர்வீக பூமி. இலங்கையில் முஸ்லிம்கள் நிர்மாணித்த முதலாவது பள்ளிவாசல் தான் பேருவளை மருதானையில் இருக்கின்றது. இந்த சீனவத்த ஜும்ஆப் பள்ளிவாசல் முஸ்லிம்கள் நிர்மாணித்த இரண்டாவது பள்ளிவாசலாகும். இப்பள்ளிவாசல் கி. பி. 600 களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க பள்ளிவாசல்.
இலங்கைக்கு முஸ்லிம் ஆண்கள் மாத்திரம் தான் வந்தனர். முஸ்லிம் பெண்கள் எவரும் இங்கு வரவில்லை. இங்கு வந்த முஸ்லிம் ஆண்கள் இங்கு வாழ்ந்த சிங்களப் பெண்களை திருமணம் முடித்து வாழ்ந்தனர்.
அதனால் உலகில் எங்கு முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் இலங்கையில் வாழும் சகல முஸ்லிம்களும் சிங்களவர்களின் உறவினர்களே. அதனால் இந்நாட்டில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மத வழிபாடுகளைத் தவிர வேறுபாடுகள் எதுவும் கிடையாது. பேருவளை தொகுதியில் வசிப்பவர்கள் சிங்கள முஸ்லிம்கள். முஸ்லிம் சிங்களவர்களாவர். இந்த ஒற்றுமையை நாம் தொடர்ந்தும் பேணி வருகின்றோம்.
எமது ஜனாதிபதி அவர்கள் இன, மத பேதம் பாராது தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப செயற்பட்டு வருகின்றார். அவருக்கு நாம் நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றோம் என்றார்.
.jpg)
Intta manitharin vaarththaikali namby 13 vathu thirutha sattathil amanththai pole amaratheerkal. panaththitkaka athiyum sayum ivar janathpathy idam demand panny athavathu pettrukkolla muyatchikkum murai ithuthan amara vendam.
ReplyDeleteSri