எகிப்தில் உள்நாட்டு போர் - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை
சிரியாவை தொடர்ந்து எகிப்து நாடும் உள்நாட்டு போரை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எகிப்தில் அதிபர் முகமது மோர்சியை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு எதிராக, மோர்சி ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதில் ஏற்பட்ட கலவரங்களில் பலர் பலியாயினர். இதைத் தொடர்ந்து, அதிபரை கைது செய்த ராணுவம் அவரை காவலில் வைத்தது. அவருக்கு பதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அட்லி மன்சூரை தற்காலிக அதிபராக அறிவித்தது. அவரும் பொறுப்பேற்றார். இதன்பின், மோர்சி ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். அவ ர்களுடன் புரட்சியாளர்கள் மோதி வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று கஜகஸ்தான் போகும் வழியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: சிரியாவில் புரட்சி வெடித்து, தற்போது உள்நாட்டு போராக மாறி விட்டது. அங்கு நிலைமை மிக மோசமாகி விட்டது. தற்போது எகிப்திலும் அதே நிலை உருவாகி வருகிறது. அங்கும் மோதல்கள், உள்நாட்டு போராக மாற வாய்ப்புள்ளது. எனவே, எகிப்தில் அனைத்து தரப்பினரும் அமைதி காத்து அரசியல் சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டும்.

Post a Comment