Header Ads



வைத்தியசாலை வாசலில் பிரசவம் - கீழே விழுந்த சிசு துடிதுடித்து மரணம்

(Tn) பிரசவ வேதனையால் துடித்த கர்ப்பிணித் தாயை அவசரம், அவ சரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவமனையின் வாசலில் வைத்து தாய் குழந்தையை பெற்றெடுத்த குழந்தை தவறி கீழே விழுந்து மரணமானது. 

இச்சம்பவம் சிலாபம் வைத்தியசாலையில் செவ்வாயன்று (23) இடம்பெற்றது. புத்தளம், மதுரங்குளி பகுதியிலுள்ள தலு நாயக்கபுரம் என்னும் குடியேற்றத்தில் வதியும் டப்ளியூ. எம். சாமினி திரேஸா (22) என்பவர் பிள்ளைப் பேற்றுக்காக முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருந்தார். இவருக்கு பிரசவ வலி அதிகரிக்கவே உடனடியாக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்டாராம்.

எனினும் வைத்தியசாலையின் வாசலில் வைத்து தாய் குழந்தையை பெற்றெடுக்க அது கீழே தவறி விழுந்து மரணமடைந்துள்ளது.

சிலாபம் திடீர் மரண விசாரணை அதிகாரி எம். கருணாதாச மரணவிசாரணை மேற்கொண்டார். அதிகரித்த குருதியமுக்கம் காரணமாக ஏற்பட்ட மரணம்” எனத் தீர்ப்பு வழங்கினார்.

3 comments:

  1. இப்போ லேட்டஸ் செய்தியெல்லாம் வைதியசாலையில் நடக்கும் விடயங்கள்தான். வைத்தியத்துறையில் அவ்வளவு பற்று முன்னொரு காலத்தில் வைத்தியர்கள் மிகவும் புனிதமாக மதிக்கப்பட்டார்கள் இனிவரும் காலங்களில் சில வைத்தியர்களின் பொடுபோக்காலும் அவர்களின் அரைவேக்காட்டுத்தன்மையாலும் அனேகமாக சிலர் மக்களின் கால்களால் வெகுசீக்கிரம் மிதிக்கப்படுவது மட்டும் நிச்சயம் நடக்கும் அப்படித்தான் நிலைமை சென்றுகொண்டிருக்கின்றது. (முளு மனதுடன் மக்களுக்காகச்சேவை செய்யும் வைத்தியர்கள் மன்னிக்கவும் இது உங்களுக்கல்ல) வைத்தியர்கள் என்ற பெயரில் ஆடு மாடுகளுக்கும் வைத்தியம் செய்ய லாயக்கில்லாத சில லேபல் வைத்தியர்களுக்கு மட்டும்தான்.

    ReplyDelete
  2. Why they didnt use Ambulance If Serious??? why? they are transfering to Hospitel to Hospitel then Why they didnt use??

    ReplyDelete
  3. இதற்கு தான் சொல்லுர ஒவ்வொருவரும் தெரிந்து இருக்க வேண்டும் முதலுதவி(first aid)முறைகள்.ஒரு ஆபத்து நேரத்தில் இப்படி உதவ வேண்டும் என்பதை தெரிந்து இருந்தால் உயிர்கள் காப்பாற்ற உதவலாம்.

    ReplyDelete

Powered by Blogger.