டி.பி.ஜாயாவின் நம்பிக்கை ஒரு போதும் பொய்ப்பித்துவிடக்கூடாது...!
எமது நாட்டில் பஞ்சமா பாதகங்கள் தடைசெய்யப்பட வேண்டும். அவற்றில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். எமது நாட்டில் ஒழிக்கப்பட வேண்டிய குற்றங்களும் இவைதான். எவ்வளவோ இறுக்கமான சட்டங்கள் இருந்ந போதும் இக்குற்றங்களை கட்டுப்படுத்த முடியாத நிலைமை இருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.
இன்று ஊடகங்களில் கொலை, கொள்ளை, விபச்சாரம், மதுபாவனை, சூது விளையாட்டு போன்றவற்றில் இடம் பெறும் குற்றங்கள் போன்ற செய்திகள் வெளிவருகின்றன. உலகில் உள்ள எந்த மதத்திலும், இக்குற்றச் செயலுக்கு அனுமதி இல்லை. இக் குற்றச் செயல்களால் நாட்டில் உள்ள மக்களின் கலாசாரமும், ஒழுக்க கட்டமைப்பும் சீர் குலைக்கப்படுகின்றன.
சில நாடுகளில் விபச்சாரம், மதுப்பாவனை, சூது (கெசினோ) என்பன சட்டரீதியாக அனுமதி பெற்று இயங்குவதையும் காணமுடிகிறது. (மேலை நாடுகளில்) எமது நாட்டில் மதுப்பாவனையை ஒழிக்க மது விலக்கு இயக்கம் போராடியமையை எம்மால் மறக்க முடியாது.
மதுபான நிலையங்களுக்கும், சூதாட்ட நிலையங்களுக்கும் தாராளமாக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. உல்லாசப் பயணத் துறைக்குள் மறைமுகமாக தாராளமாக விபச்சாரமும் இடம்பெறுகிறது.
இதற்கு மாற்றமாக சமயங்களும், சமயத்தளங்களும், மக்களுக்கு சிறந்ந வழிகாட்டுவதுடன், ஒழுக்க நடவடிக்கைகளையும் போதிக்கிறது. இதனால் நேரான சிறந்ந சமூகக் கட்டமைப்பு உருவாகிறது.
மது விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்குவதை நிறுத்தி விட்டு சமயத்தலங்கள் கட்டப்படுவதை அனுமதிக்க வேண்டும். இன்று சிறு பான்மை இன மக்களின் சமயத்தலங்கள் தாக்கப்படுகின்றன.(முஸ்லிம்,கிறிஸ்தவம்,இந்து) அவர்களின் வியாபாரத் தலங்களும் ஒடுக்கப்படுகின்றன, உடைக்கப்படுகின்றன, மூடப்படுகின்றன.நீதி அமைச்சராக சிறுபாண்மையைச் சேர்ந்த ஒருவர் இருந்தும் அவரால் கூட சட்டத்துறையின் பலத்தால் காவலத்துறையைக் கொண்டு எதுவும் செய்ய முடியாத ஒரு நிலை காணப்படுகிறது.
இதனைச் செய்யும் தீவிரக் குழுவினர் யார்? இவர்களுக்கு யாரோ ஒரு குழுவினர் நிதியுதவியும்,ஆலோசனையும் வழஙகுகின்றனர்.இவர்களின் அடாவடித்தலங்களையும், ஜனநாயக மீறல்களையும் பொலிசாரைக் கொண்டு கட்டுப்படுத்த முடியாதுள்ளமை ஒரு பெரும் ஆச்சரியமாக உள்ளது.
ஒரு நாட்டில் பல்லின மக்கள் வாழ்கின்றனர் என்றால் அது ஒரு பெரும் வளமாகவே பல நாடுகள் கருதுகின்றன.இலங்கையின் அரசியல் யாப்பின் அடிப்படையில் ஒவ்வொரு இனத்தினதும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இலங்கையின் ஜனாதிபதி சிறுபான்மைச் சமயத்தலைவர்களைச் சந்திப்பதை கூட தீவிர வாதக்குழுக்கள் கண்டிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளமை வியப்பாக உள்ளது.சர்வதேச நாடுகள் எல்லாம் இலங்கையில் நடைபெறும் ஒவ்வொரு செயற் பாட்டையும் உன்ன்pப்பாக அவதானித்துக் கொண்டு இருக்கின்றன. இதனால் நாட்டின் நற்பெயரும் ,புகழும் கெட்டுப் போக வாய்ப்பாக உள்ளது. இதனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கைப் பிரசைகள் அனைவருக்கும் உண்டு.
இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட இருந்த வேளை வெள்ளையர்கள் முஸ்லிம் தலைவரான டி.பி.ஜாயா அவர்களிடம் கேட்டனர்.உங்கள் தெரிவு என்ன என்று.அதற்கவர் 'நாங்கள் பெரும்பான்மை மக்கழுடன் இனைந்து வாழ விரும்புகிறோம்' என்று. இச்சம்பவத்தை நாம் அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டி உள்ளது. இவரின் நம்பிக்கை ஒரு போதும் பொய்ப்பித்துவிடக்கூடாது.

Post a Comment