'எகிப்தின் பரிதாபம்' - கெளரவமுள்ள பிரஜைகளை ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கிறது இராணுவம்
எகிப்து இராணுவ தளபதி அப்தல் பத்தாஹ் அல் சிசி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீவிரவாதத்திற்கு எதிராக பொதுமக்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்துள்ளார்.
‘தீவிரவாதம் மற்றும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர எனக்கு அனுமதி வழங்கும் வகையில் அடுத்த வெள்ளிக்கிழமை (நாளை) கெளரவமுள்ள அனைத்து எகிப்து பிரஜைகளும் வீதியில் இறங்கி ஆதரவு தரவேண்டும்’ என்று சிசி அழைப்பு விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற இராணுவ நிகழ்வொன்றில் பங்கேற்ற அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
எகிப்தில் இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் நாடெங்கும் முர்சி ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்திவரும் நிலையிலேயே இராணுவ தளபதி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இதில் திட்டமிட்டபடி அரசியல மைப்பு திருத்தம், புதிய தேர்தல் ஆகிய அரசியல் சீர்திருத்தங்கள் தொடரும் என சிசி வாக்குறுதி அளித்தார். அத்துடன் இராணுவத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் வதந்திகளையும் அவர் மறுத்தார். “எகிப்து இராணுவம் ஐக்கியமாக உள்ளதை இறைவனிடம் ஆணையிட்டு கூறுகிறேன்” என்றார்.
எனினும் முர்சியின் ஆர்ப்பாட்ட அழைப்புக்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு உடன் பதிலளித்துள்ளது.
அந்த அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் இஸாம் அல் எரியான் சிசிக்கு நேரடியாக பதிலளிக்கும் வகையில் கூறிய அறிக்கையில் “இராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக மில்லியன் கணக்கான மக்கள் பேரணி நடத்துவதை உங்களது எச்சரிக்கையால் தடுக்க முடியாது.
நீங்கள் உங்கள் அலுவலகத்தில் இருந்து சதிவேலையையே தொடர்ந்து செய்து வருகிaர்கள்” என்று அவர் குறிப்பிட்டார். Tn

Post a Comment