பாலஸ்தீனிய சிறைக் கைதிகளை விடுவிக்கப்போகிறதாம் இஸ்ரேல்
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்படுவதற்கு முதல்கட்டமாக இஸ்ரேல் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தங்கள் நாட்டு சிறையில் இருக்கும் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கடந்த சில மாதங்களுக்குள் ஆறாவது முறையாக இஸ்ரேலுக்கு வந்தபோது, நடந்த நான்கு நாட்கள் பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த முடிவு எட்டப்பட்டது.
நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில், ஜான் கெர்ரி அடுத்த வாரத்தில் இதுகுறித்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வாஷிங்டனில் தொடங்கலாம் என்று அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டினால்தான், மற்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதால் ஜான் கெர்ரி இதில் தீவிரமாக முயற்சி செய்தார் என்று பத்திரிகையாளர் செய்தி தெரிவிக்கின்றது.
இஸ்ரேலிய மனித உரிமை கழகத்தின் கணக்கீட்டின்படி 4,817 பாலஸ்தீனியர்கள் கைதிகளாக உள்ளதாகவும், அவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரியவருகின்றது. பாலஸ்தீனியர்களும் அவர்கள் தரப்பில் கடந்த ஒன்பது மாதங்களாக சமரசப் பேச்சுவார்த்தைக்கு முயற்சித்து வந்ததாக பிரதமர் லிகட் பெடிநோவின் கட்சி உறுப்பினரான ஸ்டெய்னிட்ஸ் தெரிவித்தார். ஆனால், இஸ்ரேலால் ஆக்ரமிக்கப்பட்ட வெஸ்ட்பேங்க் மற்றும் கிழக்கு ஜெருசலேமில் நடைபெறும் கட்டுமானத் தீர்வு நிறுத்தம் போன்ற பாலஸ்தீனத்தின் முன் நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்க மறுத்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். கட்டுமான நிறுத்தம் அல்லது இஸ்ரேலின் சலுகைகளோ, எல்லைகளோ வரையறுக்கப்படும் முன்னால் பாலஸ்தீனம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாது என்றும் அவர் கூறினார்.

Post a Comment