Header Ads



13 ஆவது திருத்தச் சட்டமும் முஸ்லிம் பரிமானமும் கருத்தரங்கு (படங்கள்)


நீதிக்கும் சமாதானத்துக்குமான முன்னணி, (FJP) கொழும்பு ஹெக்டர் கொப்பே கடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் 13ஆவது திருத்தச் சட்டமும் முஸ்லிம் பரிமானமும் என்ற கருப்பொருளில் கருத்தரங்கொன்றை நடத்தியது.

இக்கருத்தரங்கில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், புத்திஜீவிகள், ஊடகவியளாலர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன். 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் முன்வைத்தனர்.

13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் நாட்டின் பல்வேறு மட்டங்களிலும் பரவலாக முன்வைக்கப்படும் இக்கால கட்டத்தில் பின்வரும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

01. 13ஆம் திருத்தச் சட்டம் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன என்பதை அறிந்து கௌ;ளல்.
02. அரசியல் ரீதியான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் கரிசனையை பிரதிபலிக்கச் செய்தல்.

03. 13ஆவது திருத்தம் தொடர்பான அரசியல் கட்சிகளின் பல்வேறு கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் அறிந்து கொள்ளல்.

04. 13ஆவது திருத்தம் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் ஒரு பொதுத் தளத்துக்கு கொண்டுவருதல்.

05. இங்கு முன்வைக்கப்படும் கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் முன்வைத்து 13ஆவது திருத்தம் தொடர்பாக ஒரு பரந்துபட்ட பார்வையை சமூக தளத்தில் ஏற்படுத்தல்.

நீதிக்கும் சமாதானத்துக்குமான முன்னணியின் தலைவர் எம்.ஆர். நஜா முஹம்மத் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கோட்டே நாக விகாராதிபதி மதிப்பிற்குறிய மாதுலுவாவே சோபித தேரர், ஜாதிக ஹெல உருமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாத்த வர்ணசிங்ஹ, தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் பீட உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க, லங்கா சம சமாஜக் கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் பேராசிரியர் விஜேகுமார், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொதுச் செயலாளர் சட்டத்தரனி நிசாம் காரியப்பர், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயளாலர் வை.எல்.எஸ. ஹமீத், தேசிய காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயளாலர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகான சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி, புதிய சிஹல உருமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்ரா, சிவில் சமூக செயற்பாட்டாளர்களான கிரிஸ் தர்ம கீர்த்தி, எஸ்.எம்.ஏ. நியாஸ் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்.
மேலும், தேசிய புலமையாளர்களின் ஒன்றியத்தின் பிரதிநிதி பந்துள சந்திரசேகர ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர், யாழ். சமூக செயற்பாட்டாளர்களான அஸ்மி அய்யூப், அஜ்மல், முன்னால் மாகாண சபை உறுப்பினர், எஸ்.எஸ்.பீ. மஜீத், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர். என்.எம். அமீன் ஆகியோரும் கலந்துரையாடலின் போது தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

No comments

Powered by Blogger.