Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார புதிய பீடாதிபதியாக எம்.அப்துல் ஜப்பார் தெரிவு

(யு.கே.காலித்தீன்)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் புதிய பீடாதிபதியாக சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர் எம். அப்துல் ஜப்பார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கலை கலாச்சார பீடத்தின் முன்னால் பீடாதிபதி பலிலுல்ஹக்கின் மறைவினை அடுத்து ஏற்பட்ட இடைவெளிக்கு  புதிய பீடாதிபதியை தெரிவு செய்யும் பொருட்டு இன்று பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மட் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.

பீடாதிபதி தெரிவுகளுக்காக மொழித்துறைத் தலைவர் கலாநிதி  எம்.ஏ.எம். றமிஸ் அப்தல்லாஹ்வும் சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர் எம். அப்துல் ஜப்பாரும் போட்டியிட்டனர். மொழித்துறைத் தலைவர் கலாநிதி எம்.ஏ.எம். றமிஸ் அப்தல்லாஹ்வுக்கு 12 வாக்குகளும், சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர் எம். அப்துல் ஜப்பாருக்கு 15 வாக்குகளும் கிடைத்தன மேலதிக மூன்று வாக்குகளினால் கலை கலாச்சார பீடத்தின் புதிய பீடாதிபதியாக சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர் எம். அப்துல் ஜப்பார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
வாக்களிப்பதற்கு 31 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவ்வாக்களிப்பின் பிரகாம் 28 பேர் வாக்களித்திருந்தனர் அதில் ஒருவாக்களிப்பு நிராகரிப்பட்டதுடன் ஏனைய மூன்று பேர் வாக்களிப்புக்கு சமுகம் அளிக்கவில்லை இதன் காரணமாக மூன்று மேலதிக வாக்குகளினால் புதிய பீடாதிபதியாக  எம். அப்துல் ஜப்பார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் பிரகாரம் இன்றிலிருந்து தொடர்ந்து  மூன்று வருடங்களுக்கு பீடாதிபதியாக எம். அப்துல் ஜப்பார் கடமை பொறுப்பினை மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. Kalideen- This is not a public election to count the votes. This is the first time a dean election is published in a newspaper. Disgrace to the university community. Legally Jabbar cannot be a lecturer.

    ReplyDelete
  2. Dear Mr Nafeel who are you man? to comment about Mr Jabbar's Lecture post. Do you have anythings in your skull he has been a lecture since fifteen years.

    ReplyDelete

Powered by Blogger.