கல்முனை ஸாஹிராவில் தொழில்நுட்ப பாடநெறி அறிமுகம் (படங்கள்)
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இன்று உயர்தர வகுப்புகளில் புதிதாக அறிமுப்படுத்தியுள்ள ” தொழில்நுட்ப பாடநெறி ” உத்தியோக புர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் ஏ. ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ரீ.ஏ.நிஸாம் பிரதம அதிதியாகவும் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு பாடநெறியினை ஆரம்பித்து வைத்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் தொகுதிக்கு ஒரு பாடசாலை என்ற அடிப்படையில் கல்முனைத் தொகுதிக்கான தொழில்நுட்ப பாடநெறியனை தொடர்வதற்கு கல்வி அமைச்சினால் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் தொழில்நுட்ப பாடநெறியினை தொடர்வதற்கு கல்முனை , சாய்ந்தமருது , மாளிகைக்காடு , காரைதீவு , மாவடிப்பள்ளி , நிந்தவுர் , பாண்டிருப்பு , நற்பிட்டிமுனை மற்றும் மருதமுனை பிரதேசத்தைச் சேரந்த மாணவ மாணவிகள் கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் இன மத வேறுபாடின்றி ஒரே வகுப்பில் கல்வி பயிலும் சந்தர்பமொன்று மூன்று தசாப்த காலத்தின் பின் கிடைத்துள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தெரிவித்தார். கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் கல்முனை ஸாஹிாவில் தமிழ் முஸ்லிம் மாணவ மாணவிகள் உயர்தர விஞ்ஞான , கலை , வர்த்தக துறைகளில் கல்வி பயின்றமையை இந்த சந்தர்ப்பத்தில் கல்விப் பணிப்பாளர் ஞாபக மூட்டினார்.


Post a Comment