Header Ads



தமிழ்-முஸ்லிம் ஆசிரிய பயிலுனர்களால் மூலிகைத் தோட்டம் திறப்பு


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை  தேசிய கல்விக்கல்லூரியின் மட்டக்களப்பு கிளையின் 2ஆம் வருட கணிதப் பிரிவு (2012-2014) 20 இருபது தமிழ் மற்றும் 3மூன்று முஸ்லிம் ஆசிரிய பயிலுனர்களின் அயராத முயற்சியின் பயனாக கிழக்கு மாகாணத்தில் அருகிவரும் மூலிகைகளை ஒன்றிணைத்து அமைக்கப்பட்ட மூலிகைத் தோட்டம் இன்று திங்கட்டகிழமை மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரி வளாகத்தில் மட்டு தேசிய கல்விக்கல்லூரி பீடாதிபதி எஸ்.பாக்கியராஜா மற்றும் மட்டு- தேசிய கல்விக்கல்லூரி புதிய பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் ஆகியோரினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இம் மூலிகை தோட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் அருகிவரும் மூலிகைகளான இரு வெலி,முடக் கொத்தான்,கரிசாலங்கனி ,நறுவிழி,கற்றாளை,முடிதும்பை,பொன்னாவரை, கற்பூரவள்ளி,கறுவா, வெண்கொடிவேலி உள்ளிட்ட இன்னோரன்ன பல மூலிகைகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக் கல்லூரியின் இச் செயற்திட்டத்திற்கான விரிவுரையாளர் திருமதி தர்சினி சுந்தர்ராஜன் , மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக் கல்லூரியின் கணிதப்பிரிவு விரிவுரையாளர் என்.நாகேந்திரன் மற்றும் கல்விக் கல்லூரியின் பீடாதிபதிகள்,விரிவுரையாளர்கள், ஆசிரிய பயிலுனர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த இம் மூலிகைத் தோட்டம் கிழக்கு மாகாணத்தில் அருகிவரும் மூலிகைகளை பாதுகாக்கும் முகமாக மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் 2ஆம் வருட கணிதப் பிரிவு ஆசிரிய பயிலுனர்களினால் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.