Header Ads



தேர்தல் கூட்டு தொடர்பில் அமைச்சர்கள் ஹக்கீம், றிசாத் சந்திப்பு

இலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து பேச்சுகள் இடம்பெறவுள்ளன.

நாளை செவ்வாய்கிழமை இது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தான் சந்தித்துப் பேசவுள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பிபிசி தயிடம் தெரிவித்தார்.

அவ்வாறான ஒரு கூட்டணி குறித்து பேசுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி, கடந்த வாரம் கூறியிருந்தார்.

அண்மையில் வட மாகாணத்தின் பல பிரதேசங்களுக்கு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின்போது முஸ்லிம் கட்சிகள் பிரிந்து போட்டியிட்டதால் ஐந்து இடங்களில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது என்றும் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்.

முஸ்லிம்கள் மட்டும் ஒரு அணியாக நிற்பதன் மூலம் வட மாகாண மக்களின் நலன்களை முன்னெடுக்க முடியும் என்று தாங்கள் நம்பவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வட மாகாண சபைக்கான தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஆளும் கட்சியோடு இணைந்து போட்டியிடுவதே சிறந்த பலனளிக்கும் என்கிறார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து போட்டியிடும் வேளையில், அச்சமூக மக்களின் வாக்குகள் சிதறும் என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்துள்ளனர் என்றும் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்.

எனினும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு வட மாகாணத்தில் பெரிய அளவில் வெற்றிகளைப் பெற்று மாகாண சபையில் இடங்களைப் பெறுவது இயலாத ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

வடக்கு மாகாணத்தில் ஆளும் கட்சிக்கென்று ஒரு வாக்கு வங்கியுள்ளதையும் மறந்துவிட முடியாது எனவும் கூறும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், கட்சி அரசியலுக்கு அப்பால் மக்களின் நலன்களை மனதில் கொண்டு வாக்குகளை சிதறடிக்காமல் அதிக இடங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய தேவை எனவும் கூறுகிறார்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆளும் கட்சியோடு சேர்ந்து போட்டியிடுவதுதான் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

5 comments:

  1. ஓமோம்.. 'கட்சி அரசியலுக்கு அப்பால் மக்களின் நலன்களை மனதில் கொண்டு வாக்குகளைச் சிதறடிக்காமல் அதிக இடங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்கிற ஞானம் இப்பதான் இந்தத் தம்பிக்கும், அண்ணருக்கும் வந்திருக்கு.

    உவங்கள் ரெண்டு பேரும் அமைச்சரவையில குந்திக் கொண்டிருந்து இத்தனை காலமாகச் செய்து கிழிக்காத விடயங்களைத்தான் இனி அரசாங்கத் தரப்பில அதிக முஸ்லிம் மெம்பர்மாரைப் பெத்துக் கிழிக்கப் போகினம்போல..

    உவங்கட கட்சியில தெரிவாகுற முஸ்லிம் மெம்பர்மாருக்கு மஹிந்த சிந்தனையில ஆளுக்கொரு வரியில்லா வாகனம் இறக்க பெர்மிட் குடுத்தா எல்லாம் கிளிஞ்சதுடா குஞ்சு! பேந்து வயைப் பொத்திக்கொண்டு உந்தத் தலைவர்மாரைப் போலத்தான் உந்த மாகாண மெம்பர்மாரும் வாலைச்சுருட்டிக் கொண்டு குந்திக்கொண்டிருப்பினம்.

    சும்மா சைக்கிள் கட்டைக்கும், தையல் மெஷின்களுக்கும், தகரத் துண்டுகளுக்கும் எங்கட சனங்கள் இந்த முறயும் வாக்களிக்காம தமிழ்ச் சனத்தப்போல மண்ணுக்காகவும், மானத்தோட வாழ்றதுக்காகவும் வோட்டுக்களப் போடணும்.

    உப்பிடித்தான் மக்காள் இஞ்ச கிழக்கிலயும் வந்து குழப்பினவங்க. பேந்து எல்லாத்தயும் ரெண்டு மந்திரிப் பதவிக்காக வித்துப் போட்டாங்க. இவங்க மக்களுக்கான மந்திரிமாரில்லடா மக்காள். அவங்கட ஆக்களுக்கான பெரும் தந்திரிமாரு என்கிறத நல்லா கவனமாப் புரிஞ்சி உங்கட பொன்னான வாக்குகளம மண்ணாக்கிப் போடாம இருக்கப் பாருங்க

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. Always they are thinking about power not providing services to Muslims. There are lots of problems in front of Muslims, but their problem is capturing power.
    You can’t solve our problems using existing power, why you need more power. Do you need more personal benefits from government?

    ReplyDelete
  3. சில்லறை அரசியல் வியாபாரிகளான ஹக்கீமும், ரிசாத்தும் தங்களது வியாபரத்தை மேலும் உறுதிபடித்துக் கொள்வதற்காக கூட்டுச் சேர்ந்து மொத்த வியாபாரியான ராஜபக்சவிடம் முஸ்லிம்களை அடிமைகளாக விட்பதட்கு ஆயத்தம் ஆகுகிறார்கள். இவர்களின் பின்னால் செல்லும் இந்த ஏமாளி முஸ்லிம்களை அந்த இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.

    இலங்கையின் வரலாற்றிலே முஸ்லிம்கள் இந்த ராஜபக்சவின் ஆட்சியில் தான் ( ஹக்கீமின் தலைமைத்துவத்தின் கீழ் ) மிக கேவலமாகவும் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டும் மூடப்பட்டும் பயமுறுத்தப்பட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்காக ஒரு துளியேனும் ஒற்றுமையாக செயற்பட சிந்திக்காதவர்கள் தங்களின் சுக போக வாழ்கைக்காக ஒன்று சேர்ந்து கேட்பதற்கு சிந்திக்கிறார்கள். அதிலும் படு கேவலம் ராஜபக்ச அன் கோ வினருடன் சேர்ந்து கேட்டபது தான் புத்திசாலித்தனமானது என ஆலோசனை வேற கூருகிரார். இவர்களை நினைத்து சிரிப்பதா அல்லது முஸ்லிம்களின் நிலையை நினைத்து அழுவதா என்று புரியவில்லை.

    முஸ்லிம்கள் ஒரே ஒரு தனிக்குழுவாக ( இந்த முனாபிக் தனமான தன்மானமற்ற வியாபாரிகளை நம்பாது) நின்று போட்டி இட்டு முஸ்லிம்களின் உருமைகளுக்காக அஞ்சாது பாடுபடவேண்டும்.

    ReplyDelete
  4. வடமாகாணத்தில் 36 க்கு 30 ஆசனங்கள் எதிர்பார்க்கும் தமிழ்கூட்டனிக்கு சவாலாக இருக்க வேண்டுமென்றால் சகல முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிநைந்து அரசுடன் கழமிரங்குவதன் மூலம் மாத்திரமே 36 இல் ஆகக்குறைந்த ஆசனங்களை முஸ்லிம்களுக்கு வடமாகாணத்தில் தக்க வைக்க முடியும். அல்லவிடல் வீணாக முஸ்லிம்களின் வாக்குகள் சிதறடிக்கப்படும் என்பதில் ஐய்யமில்லை. தமிழ் கூட்டணி அமைக்கும் ஆட்சி என்பது முஸ்லிம்களுக்கு மகிந்த ஆட்ச்சியை விட 1000 மடங்கு படு பாதகமாகவே இருக்கும்.

    ReplyDelete
  5. இந்த நாட்டையே ஆட்டிப்படைக்கும் கட்சிக்கு நீங்கள் இருவரும் கூட்டிக்கொடுக்கிறது நன்றாகத்தான் இருக்கு. முஸ்லிம் சமூகத்தின் மீது உங்களுக்கு இவ்வளவு அக்கறையா , அல்லது நக்குண்ட நன்றிக்கடனா , இரண்டுபேரும் சேர்ந்து வட மாகாணத்தை குத்திக் குதறப் போறீங்க , எவ்வளவு காசு கிடைக்கும் , இன்னமும் ஆசை தீரவில்லையா , சும்மா போங்கப்பா .

    ReplyDelete

Powered by Blogger.