கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு இலவச பொது போக்குவரத்துக்கான 'பாஸ்'
(எம்.எம்.ஏ.ஸமட்)
இந்நாட்டின் ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அனுபவிக்கும் அனுகூலங்களை கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கும் கிழக்கு மாகாண சபையினூடாக பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு. இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வின்போது மாகாண சபை உறுப்பினரினால் முன்வைக்கவுள்ள கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த ஊடகவியலாளர்களுக்கு இலவச பொது போக்குவரத்துக்கான 'பாஸ்' வழங்கும் நடைமுறையை அமுல்படுத்தக்கோரும் தனிபர் பிரேரனை தொடர்பாகக் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தனிநபர் பிரேரனை தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த தொழில்வாண்மை ஊடகவியலாளர்களின் செய்திச் சேகரிப்பைக் கருதியும் தொழில்வாண்மை விருத்திக்கான ஊக்குவிப்பை ஏற்படுத்தவும், கிழக்கில் ஊடகச் சேவையை மே;படுத்தும் பொருட்டும் கிழக்கு மாகாணத்துக்குள் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பஸ்களில் பிரயாணக் கட்டணமின்றி தமது கடமைகளுக்குச் செல்வதற்காக இலவச பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஊடகவியலாளர்கள் என்னிடம் பல தடைவ கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு 23-07-2013 கூடும் கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வின் போது இத்தனிநபர் பிரரேரனையை முன்வைக்கவுள்ளதாக அவர் கூறினார்
ஊடக சுதந்திரத்தினூடாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து, உரியவர்களின் கவனத்தை அதில் ஈர்க்கச் செய்து, அதன் மூலம் மக்களின் பிரச்சினைகள் தீர்வதற்கான தார்மீகப் பொறுப்புடனும் சேவை மனப்பான்மையுடனும் ஊடகவியலாளர்கள் சேவை புரிகின்றனர்.
இருப்பினும், இத்தகைய சேவையாற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சவால்களும் தீhத்து வைக்கப்படுவது அவசியமாகும். அதற்கு உதவுவது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் என்கும் அதில் பங்குண்டு என அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்கள் மாத்திரமின்றி நாடு தழுவிய ரீதியில் ஊடகச் சேவை புரியும் ஊடகவியலாளர்கள் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடனும் சவால்களுடனுமே ஊடப் பணியினைப் புரிந்து வருகின்றனர்.
குறிப்பாக கிழக்கு மாகாண ஊடகவிலாளர்கள் தங்களுக்கு கிழக்கு மாகாண அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும், திருகோணமலையில் ஊடகவியலாளர்கள் தங்குவதற்கான தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்படுதல் அவசியமெனவும் அரச தொழில் புரியாத பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஓய்வுதியம் பெற்றுக் கொடுத்தல் வேண்டுமெனவும் பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் முன்மைத்துள்ளனர்.
அவர்களின் எல்லாக் கோரிக்கைகளையும் குறுகிய காலத்துக்குள் நிறைவேற்ற முடியாத போதிலும் முடியுமான கோரிக்கைகளை கிழக்கு மாகாண சபையினூடாக தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன் முதற்கட்ட நடவடிக்கையாகவே இலவச பயணத்துக்கான பாஸ் நடைமுறையைக் கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்துவதற்கான அங்கீகாரத்தை ஊடகவியலாளர்களுக்குப் பெற்று கொடுக்க இந்தத் தனிநபர் பிரரேரனை முன்வைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment