இன, மத பேதங்களை உருவாக்கி அரசாங்கத்தை பிளவுபடுத்த சமய அமைப்புகள் சதி
இன மத பேதங்களை ஏற்படுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தை பிளவுபடுத்துவதற்கு சில சமய அமைப்புகள் நடவடிக்கை எடுத்துவருவதாக உயர்கல்வியமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மினிபே பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், பொதுபல சேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் முகமான அமைச்சர் இந்த நிலைப்பாட்டை வெளியிட்டார்.
ஞானசார தேரர் அண்மையில் குருணாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது, உயர்கல்வியமைச்சர் நாட்டின் கல்வித்துறையை நாசப்படுத்தி வருவதாக குற்றம்சுமத்தியிருந்தார்.
இவ்வாறான கருத்தை அவர் வெளியிட்டமையை கண்டித்துள்ள உயர்கல்வியமைச்சர், குறித்த தேரரின் அண்மைக்கால இனவாத நடவடிக்கைகளையும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். Sfm

மிக நன்றி நண்பரே !
ReplyDeleteமுல்லை முள்ளள்தானே எடுக்கவேண்டும்.
மரத்தில் இருந்து விலுந்தவனை மாடு குத்தியதாம்.
ஏ............ களகொடஅத்தே .....
உனக்கு உயர் கல்வி அமைச்சு பதில் கூறும்.
அடிச்சிக்கொண்டு சாகுங்கடா...
தேரரின் இந்த ஒரு கருத்தே உயர்கல்வி அமைச்சரை இந்தளவுக்கு பாதிக்கச் செய்திருக்குமாயின் அனுராதபுரம் தொடக்கம் மஹியங்கனை ஈறாக நடைபெற்ற சம்பவங்களும், தேரர்களின் கருத்துக்களும் முஸ்லிம்களின் உள்ளங்களை எவ்வளவு தூரம் புண்படுத்தி இருக்கும் என்பதை இனியாவது அரச தரப்பிலுள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Appo aen arasankam paathuk kondirukkuthu?
ReplyDeleteஇந்த கலகொடயை நாம் ஒண்டும் பண்ண தேவயில்ல இன்ஷா அல்லா இன்னும் கொஞ்ச நாள்ல அவனை சிங்கள மக்களே ஓட ஓட அடித்து விரட்டி விடுவார்கள்...
ReplyDeleteநான் அடிக்கடி சொல்லும் விடயம் என்னவென்றால் இந்தப்பயங்கரவாதக் குழுக்களுக்கு பெளத்தர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அவங்களுக்குள்ளேயே புரிந்துகொள்ளட்டும்.
ReplyDelete