Header Ads



பொருளாதார அபிவிருத்தி வேகம் உயர் நிலையில் உள்ளது - அமைச்சர் றிசாத்


(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டின் இலக்கான 20 பில்லியன் வருமானத்தை நோக்கி பெருளாதார அபிவிருத்தி துறைக்கு ஏற்றுமதி அபிவிருத்தி சபை புதிய வியூகங்களை அமைத்து செயற்படுவதாகவும்,அதற்கு துறை சார்ந்தவர்கள் மற்றும். ஏற்றுமதியாளர்கள் வழங்கிவரும் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்று கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

நேற்று இரவு கொழும்பு கிறிஸ்பெரி நட்சத்திர ஹோட்டலின்   கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற   20 ஏற்றுமதி மற்றும் உற்பத்தி துறைகளில் தெரிவு செய்யப்பட்ட ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஆலோசகர்கள் 400 பேருக்கான அங்கத்துவ கடிதங்களை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் பந்துல ஏகொடகே தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் செயலளார் அநுர சிறிவர்தன,ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி.ஜாதா வீரகோன்,நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி யூசுப் கே மரைக்கார் உட்பட பெரும் எண்ணிக்கையிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் இங்கு பேசும் போது கூறியதாவது,

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வேகம் கடந்த காலங்களை விட உயர் நிலையில் உள்ளது.இதனால் வெளி நாடுகள் பலவும் எமது நாட்டில் முதலீடுகளை செய்வதற்கு முதலீட்டாளர்களை அனுப்பி வைக்கின்றது.இதன் மூலம் எமது நாட்டு உற்பத்தியாளர்கள் சர்வதேச ரீதியில் தொடர்புகளையும்,அவர்களின் ஊடாக இலங்கை உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் இரு மாற்று திட்டத்தினையும் நடை முறைப்படுத்திவருகின்றது.

இலங்கை உற்பத்திகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்புகள் காணப்படுகின்றன.குறி்ப்பாக ஜரோப்பிய நாடுகள் எமது உற்பத்திகளை அதிகமாக விரும்பி பெறுவதாக கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன்,இன்று நியமனம் பெற்றுள்ள ஆலோசனை சபை உறுப்பினர்களின் பங்களிப்பும்,ஒத்துழைப்பும் எமது நாட்டின் அபிவிருத்திக்கு இன்றியமையாததொன்று என்பதையும் பிரகடனப்படுத்தினார்.

No comments

Powered by Blogger.