Header Ads



அரசாங்கத்தோடு எனக்குள்ள பேரம் பேசும் சக்தியும், பலமும் மிகப் பெரியது - பஷீர் சேகுதாவூத்

(Tm) 'மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் தலைமைத்துவம் இப்பொழுது மாத்திரமல்ல எப்பொழுதுமே பலவீனமானதுதான். அதேவேளை, இந்த மாவட்டத்திற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள முதல் அமைச்சு சரித்திரத்திலே இப்பொழுதுதான் கிடைத்துள்ளது. இன்று இந்த அரசாங்கத்தோடு எனக்குள்ள பேரம் பேசும் சக்தியும் பலமும் மிகப் பெரியது என்று  உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

இதனை நான் நகைச்சுவையாகச் சொல்லவில்லை. அந்தளவுக்கு நான் அரசுடன் நம்பிக்கையைக் கட்டி வளர்த்துள்ளேன். நான் வேகமில்லாமல் விவேகத்துடன் இயங்கக் கூடிய ஒரு நிசப்தமான செயற்பாட்டாளர். இது எனக்கு மட்டுமுள்ள ஒரு முறைமையாக இருக்கக் கூடாது. இந்தக் குணாம்சம் ஒட்டு மொத்த இந்த சமூகத்தினதும் பண்பாகவே இருக்க வேண்டும் என்றுதான் நான் எதிர்பார்க்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

 அபிவிருத்திக் கனவில் மிதக்கின்ற சமூகமாக இந்த சமூகத்தைக் கற்பனை உலகில் வாழ வைக்க நான் விரும்பவில்லை.' என்றும் அமைச்சர் பஷீர்  சேகுதாவூத் குறிப்பிட்டார்.

ஏறாவூர் கல்வி அபிவிருத்திச் நிறுவனத்தினால் நேற்று வெள்ளி மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐம்பெரும் விழாவில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிறுவனத்தின் தலைவர் ஏ.நஸீர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் விதவைகளுக்கு சுய தொழிலுக்கான  கொடுப்பனவு, வறிய மாணவர்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவு, பள்ளிவாசல் புனரமைப்புக்கு நிதியுதவி, விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு, கணனி பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் என்பன இடம்பெற்றன.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பஷீர் சேகுதாவூத்,

'பங்களிப்புச் செய்யாத அரசியல் வாதிகளையும் பிரதம அதிதிகளாக அழைக்க வேண்டும் என்ற நிலைமை கல்வி அபிவிருத்தியை மேற்கொள்ளும் ஒரு நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது என்பது இன்றைய எமது சமூகச் சுழலில் இருக்கின்ற அவலத்தைக் காட்டுகின்றது. அரசியல் வாதிகள் ஏனைய நிறுவனங்களில்லாமல் தமது சொந்தக் காலில் நிற்க முடியாது. நிறுவனங்கள் அரசியல் வாதிகளில்லாது தமது சொந்தக் காலில் நிற்கவும் முடியாத ஒரு போக்குக் காணப்படுகின்றது.

தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற இந்தப் பிரதேசங்களிலே நாங்கள் கடுமையாக செயற்படுகின்றோம் என்பதில் முன்னுதாரணமாகவும் பெருந்தன்மையாகவும் இருக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்கின்ற மற்றவர்களுக்கு அவர்கள் நாணிக் கோணி நிற்கும்படியாக நாம் நன்மைகளையே செய்ய வெண்டும். அப்பொழுதுதான் அவர்களது மனங்களை வெல்ல முடியும். தொப்பிகளும் பொட்டுக்களும் வேட்டிகளும் ஹபாயாக்களும் சமத்துவமாகப் பார்க்கப்படுகின்ற ஒரு சூழ்நிலையில்தான் கொள்கை அடிப்படையிலான விடயங்கள் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

சில சிங்கள அமைப்புக்கள் ஒரு தொப்பி போட்ட நபரையும் ஒரு பொட்டு வைத்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு சமத்துவம் பேசித் திரிகின்றன. மக்களின் குடிப் பரம்பலுக்கேற்ற வகையிலே சமமாகப் பங்கிட்டு வழங்குவது என்பது இந்த நாட்டிலே ஒரு குறையாகத் தான் இருந்து வந்திருக்கின்றது.

யுத்தத்திற்குப் பின்னர் நாடு முழுவதும் இனத்துவேசமும் இனப் பகைமைகளும் வீழ்ச்சியடைவதற்குப் பதிலாக எழுச்சி பெற்று வருகின்றது. யுத்த காலத்திலிருந்த கோபதாபங்களுக்கு மேலாக காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் பகைமையும் யுத்தம் முடிந்த பின்னர் மேலோங்கியிருக்கின்றது.

இதற்கு காலாகாலமாக இருந்து வந்த அரசியல்தான் காரணம். இனங்களுக்கிடையிலே பகைமை வைத்துச் செய்யப்பட்டு வந்த அரசியல்தான் இதற்கு களம் அமைத்துக் கொடுத்தது. பரம்பரையாக நாம் இந்த இன வெறுப்பு அரசியலுக்குப் பழக்கப்பட்டு விட்டோம். இப்பொழுது நாமெல்லோரும் இனவெறுப்பு அரசியலின் மடியிலே சாய்ந்து கண்ணயர்கின்றோம். இனத்துவேச தாலாட்டில் நாம் தூங்குகின்றோம்.
சிங்கள மக்களை தமது அபிமானிகளாக தொடர்ந்து தக்க வைத்திருக்க வேண்டுமென்றால் அங்கே இனத்துவேசத்தைக் கிளறி விட வேண்டும். இதைத்தான் அங்குள்ள கட்சிகள் விரும்புகின்றன.

முஸ்லிம்கள் வர்த்தகம் செய்து வாரிச் சுருட்டிக் கொள்கின்றார்கள் என்றோ, முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் வெளி நாட்டு வளங்களைப் பயன்படுத்தி மதம் மாற்றுகின்றார்கள் என்றோ, காணிகளைப் பிடிக்கின்றார்கள் என்றோ, கலாச்சாரத்தை மாற்றுகின்றார்கள் என்றோ எதையாவது கூறி வரிந்து கட்டிக் கொண்டு வம்புக்கிழுக்க வேண்டும். இதேவிடயத்தைத் தான் தமிழ்த் தேசியமும் செய்கின்றது.

தமிழ்த் தேசியத்திற்கு முஸ்லிம் சமூகம் செய்த அனுசரணை என்பது மிகப்பெரியது. அளவிட முடியாதது. குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று.  தமிழ்த் தேசியத்தினுடைய அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தூண்களாக முஸ்லிம் சமூகம் இருந்திருக்கிறது. இந்திய இலங்கை ஒப்பந்தம் முஸ்லிம்களின் முதுகிலே எழுதப்பட்ட அடிமைச் சாசனம் என்று எமது மறைந்த தலைவர் அஷ்ரப் சொன்னார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆயினும், தமிழர் நலனுக்காக நாம் அதனை சகித்துக் கொண்டு அதற்கு ஆதரவளித்தோம். தமிழர் தரப்பின் காப்பரணாக நாம் இருந்திருக்கின்றோம். ஆனால் தமிழ்த் தேசியம் அதனை மறந்து வாகனேரியில் விவசாயிகளுக்கிடையில் ஏற்பட்ட தண்ணீர்ப் பிரச்சினையை அரசியலாக்கப் பார்க்கின்றது. அதன் வெளிப்பாடுதான் ஆர்ப்பாட்டம்.' என்றார்.

13 comments:

  1. முஸ்லிம்களின் பலத்தையும் ஒற்றுமையையும் உடைக்கும் புதியதோர் சக்தி முஸ்லிம்காங்கிரஸிலிருந்து இன்னுமொரு உதயம்....

    ReplyDelete
  2. ஆனா எந்த ஆணியும் புடிங்கின மாதிரி தெரியெலியெ

    ReplyDelete
  3. பிறக்கும் போது முடம் பேய்க்கு பார்த்து ஆவப்போவது ஒன்றிமில்லை ....அதை நிருபித்துள்ளீர்கள் என்றால் மிகையன்று ஆயுத போராட்ட காலத்தில் ஈரோஸில் இணைந்து முதல் காட்டிகொடுப்பையும் ...புனர் ஜென்மம் பெற்றுள்ளதாக கூறி மு.கா.வில் இணைந்து மர்ஹூம் தலைவர் காலத்தில் எம்.பி.ஆனீர்கள் அவரது மறைவை தொடர்ந்து தற்போதைய தலைவரை ப்ளக் மெயில் பண்ணி எம்.பி.யாகி பிரதி அமைச்சராகி,இறுதியில் பாம்பாக மாறி தலைவரை விற்று முழு அமைச்சராகி இரண்டாவது காட்டி கொடுப்பதையும் செய்து முடித்து உங்கள் பேரம் பேசும் சக்தி பற்றி பிதற்றுவது ...இறால் தலயில் எதையோ வைத்து கொண்டு தான் புனிதம் என்று கூறுவது போன்றுள்ளது ..என்பது தான் உண்மை.

    ReplyDelete
  4. இந்த வீரம் இவரிடம் இருந்து எதிர்பார்த்ததுதான். என்ன அப்பிடிபெரிய பேரம் பெசும் சக்திகத இவருக்கு இப்ப. இவ்வலவு நாளும் இவருக்கு கட்சி கொடுத மதிப்பு, தொடர்சியான தேசிய பட்டியல், செய்தத மறந்துட்டு அவர்ர விருப்பத்துக்கு ரிசைன் பன்னிட்டு திரும்ப அவர்ர மூப்புக்கு மினிஸ்றி எடுதுக்கு என்ன கட்சிய ஒடைக்கபோறாராமா? சரி, இவர் பேசி இருக்கலாமே ஜனாதிபதிக்கிட்ட இந்த 13 கிழக்குக்கு தேவை என்டு பேசி இருக்கலாமே.என்ன பெரிய பேரம் வேன்டிகெடக்கு இப்ப. அவன் இரறைச்சி கடய பூட்டு என்கிறான், கிறன்பாஸ்ல புதுசா அனுமதி யோட கட்டின பள்ளைய தொறக்க உர்ரானில்ல, இத பேசி இருக்கலாமே. இவ்வளவேல்லாம் சேய்றவங்களோட சேர்ந்து இலக்சன் கேட்கனும் எங்கயல். என்ன நியாயம்.

    ReplyDelete
  5. களவுல போயி அமைச்சரானால் முஸ்லிம்கட தலைவர் ஆயிடுவீங்களோ? இப்போ அவருக்கு ஹகீமுக்கு இஸலாமியப் பற்று புதுசா வந்திருக்கு தேர்தல் வருதுள்ல.அதான்

    ReplyDelete
  6. ithaithan appoluthu athaullavum,risadum seitharkel.neengel slmckul irunthu kondu athai seihinteerkel.so ungalai ponte kaddi kodupporkel kadchiyayai viddu veliyeruvethu nantu.

    ReplyDelete
  7. Because you lick the Shoes of MR & Co. more than others, I would say more than Rauf and Aswar thus make you to have more bargaining power. Be a gentleman don't be a shoe licker.

    ReplyDelete
  8. Renees, Sai Baba, Ilyas, Rahim, He Openion; Thank you for nice comments.

    This selfish must remove from the party ( Muslim Congress )

    ReplyDelete
  9. அப்படிப் பட்ட பேரம் பேசும் சக்திய வச்சிகுட்டுதான்
    பொது பல சேனா மற்றும் ராவய அமைப்புக்கள் முடுக்கிவிட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து நிறுத்த வாயளவில் அறிக்கை விட கூட முடியல..

    எண்ணா அப்படி பேரம் பேசி எடுத்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி கிழிஞ்சிடும் என்ற பயம் தானே ?

    சந்தர்ப்ப வாதிகள்..?

    ReplyDelete
  10. santharppam parthu kala varivida povathu pole irukke unkeda petchu .oru nalum unkaluku illathe puthu palamum peram pesum sakthium puthusa thulir vittiruku.neenge samoohathuku onrum seiatti pirtchinai ille,thayavu seithu katti kodukame irunke athu pothum.Allah pothumanavan kavanam ontrum nirantharam ille sir.

    ReplyDelete
  11. Summa Pogka Ser Neegka Eappabuma jokdan Panra

    ReplyDelete
  12. sir innum unke perachi elloraum muttal aakkum endu ninaikkathinke

    ReplyDelete

Powered by Blogger.