நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மாணவர்களை பாராட்டி கௌரவம்
(யு.எம்.இஸ்ஹாக்)
கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தர தர சாதாரண பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற சாதனையாளர்கள் எட்டு பேர் இன்று 06-07-2013 மாலை பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் இன்று கல்லூரி ஆராதனை மண்டபத்தில் நடை பெற்ற நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் பிரதம அதிதியாகவும் பிரதி கல்விபநிப்பாலர்கலான ஏ.எல்.எம்.முக்தார் பீ.எம்.பதுறுதீன் கணக்காளர் எல்.ரீ.சாலீதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கல்முனை அல் -ஹாமியா அரபுக் கலாசாலை அதிபர் மௌலவி யு.எல்.ஏ.கபூர் ,நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாசல் தலைவர் மௌலவி கே.எல்.நசீபர் ,ஓய்வு பெற்ற ஆசிரியர் மௌலவி ஏ.எல்.எஸ்.சாஹுல் ஹமீது ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
2012 க .பொ .த (சா /த ) பரீட்சையில் சிறந்த பேறு பேறு பெற்ற சாதனயாளர்களான செல்வி தஸ் னிக்கா பானு ,செல்வன் ஏ.எஸ்.எம்.அர்ஷத் ,செல்வி ஏ.ஜி.ஜெசீலா ,செல்வி என்.ஜெஸ்ரின் ,செல்வி ஜே.சபானா பேகம் , செல்வி ஏ.சரீலா ,செவன்.எப்.முகம்மது சௌமி ,செல்வன் சீ .பீ.அஹமட் சர்பான் ஆகிய சாதனயாளர்களே ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கௌரவிக்கப் பட்டனர். இந்த நிகழ்வில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் இடம் பெற்றது

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற இம்மாணவர்களுக்கும் பல்வேறு தியாகங்களுடன் அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete