வாழ்க்கை துணையின் சுகயீனம் ஒன்றுக்காக சம்பளமற்ற விடுமுறை
(யு.எம்.இஸ்ஹாக்)
அரச அலுவலர் பிள்ளை ஒன்றின் அல்லது வாழ்க்கை துணையின் சுகயீனம் ஒன்றுக்காக சம்பளமற்ற விடு முறையினை பெற்றுக் கொடுக்கும் ஏற்பாடுகள் உட்சேர்க்கப்பட்டு தாபன விதிக் கோவயினை திருத்தும் செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
அதற்கமைய அரசாங்க நிருவாக சுற்றறிக்கை 11/2013 க்கு அமைவாக தாபன விதிக் கோவையின் x11ஆம் அத்தியாயத்தின் 22 ஆம் பிரிவு திருத்தும் செய்யப்பட்டுள்ளது .
அரச அலுவலர் ஒருவரின் திருமணமாகாத பிள்ளை ஓன்று அல்லது வாழ்க்கை துணை சுகயீனம் உற்றதன் அடிப்படையில் அரச வைத்திய சாலை ஒன்றின் வைத்திய நிபுணர் ஒருவரின் பரிந்துரைக்கு அமைய மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக ஆகக் கூடிய ஒரு வருடம் வரை சம்பளமற்ற விடுமுறையினை உல் நாட்டிலோ அல்லது வெளி நாட்டிலோ கழிப்பதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது .
மேலும் தாய் மற்றும் தந்தை இருவருமே அரச அலுவலர்களாயின் நோயுற்ற பிள்ளையினை பராமரிப்பதற்காக மேற்படி திருத்தத்தில் குரிப்பிட்டதற் கமைய இருவரில் ஒரு அலுவலருக்கு மாத்திரமே விடுமுறையினை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க நிருவாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது .

Post a Comment