''வன்முறையில் வபாத்தான முஸ்லிம்களின் மேலே மியன்மார் எழுப்பப்பட்டுள்ளது''
சென்ற மார்ச் மாதம் பர்மாவின் மெய்க்டிலா பகுதியில் விற்பனைக்கு வந்திருந்த இரண்டு புத்த மதத்தினருக்கும், ஒரு முஸ்லிம் கடை உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறு நாளடைவில் அங்கு பெரிய இனக்கலவரமாக மாறியது.
கம்புகளையும், வெட்டுக் கத்திகளையும் கொண்ட இளைஞர்கள் கும்பல் ஒன்று மெய்க்டிலா தெருக்களையே மார்ச் 20,21 தேதிகளில் சூறையாடியது. 12 மசூதிகள் இந்த வன்முறையில் தாக்கப்பட்டன. இஸ்லாமிய உறைவிடப் பள்ளி உட்பட, மெய்க்டிலாவின் மத்தியப் பகுதியில் கிட்டத்தட்ட 40 பேருக்கு
மேல் கொல்லப்பட்டனர்.கடந்த 2012ஆம் ஆண்டு ராக்கின் மாவட்டத்தில் தோன்றிய வன்முறையை அடுத்து, இந்த மார்ச் மாதமும் பர்மாவின் மத்தியப் பகுதிகளில் வன்முறை பரவியது.
இந்த வன்முறைகளில் ஈடுபட்டதற்கும், புத்தத் துறவி ஒருவரைக் கொன்றதற்கும், ஏற்கனவே 10 முஸ்லிம் இன மக்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். தற்போது கொலை, கலவரம், தீவைப்பு போன்ற குற்றங்களுக்காக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் எத்தனை பேர் முஸ்லிம் இனத்தவர் என்பது தெரியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளபோதிலும், இவர்களுள் பெரும் பான்மையானோர் புத்த மதத்தினர் என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
வன்முறையின் தீவிரம் அதிகமாகி பழைய தலைநகரம் ரங்கூன் வரையிலும் ஒரு கட்டத்தில் பரவியது. அப்போதும் தாங்கள் காவல்துறையினரால் பாதுகாக்கப்படவில்லை என்று முஸ்லிம் மக்களுக்கு வருத்தம் இருந்தது. உலக முஸ்லிம் நாடுகளில் சில ஐ.நாவின் செயலர் பான் கி மூனிடம் பர்மாவில் உள்ள முஸ்லிம் மக்களின் நிலை குறித்து நடவடிக்கை எடுக்கவும் கோரின.
சவுதி அரேபியா நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பர்மா அரசியல் மறுமலர்ச்சி, பொருளாதாரத் துவக்கம் என்று உலக அரங்கில் சுமுக நிலையில் உள்ளது. ஆயினும் இந்த நிலை வன்முறையில் பலியான முஸ்லிம் மக்களின் மேல் எழுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
Post a Comment