இந்தோனேசியா சிறை கலவரத்தில் 150 கைதிகள் தப்பி ஓட்டம்
இந்தோனேசியா சுமத்திரா தீவு மேதன் நகரில் உள்ள டேன்ஜங் கஸ்டவ் சிறைச்சாலையில் சுமார் 2400 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். 400 பேர் அடைத்து வைக்கப்படவேண்டிய இடத்தில் நிறைய பேரை அடைத்து வைத்ததால், அவர்களிடையே நேற்று கலவரம் மூண்டது.
இதில் சிறைச்சாலைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மின்சாரம் தடைபட்டதால், தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் கட்டுப்படுத்த முடியாத தீ பல இடங்களுக்கும் பரவியது. அப்போது கைதிகள் அங்கிருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சிறைவார்டன்களை சிறைவைத்தனர்.
பின்னர், சிறையை உடைத்து கொண்டு அங்கிருந்து 150 கைதிகள் தப்பித்து சென்றுவிட்டனர். இதில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டோரும் தப்பித்து சென்றுவிட்டனர்.
பின்னர் நூற்றுக்கணக்கான போலீசாரும் ராணுவத்தினரும் அங்கு வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Post a Comment