ரமழான் மாத விற்பனையும், பொருட்களில் கலப்படமும்..!
(சுலைமான் றாபி)
ரமழான் வந்தாலே வியாபாரிகளுக்கு அதிகமான வருமானங்கள் கிடைக்கிறது. அது ரமழானின் பறகத்தாகும். இருந்த போதும் புதுசு புதுசாக ஒவ்வொரு மூலை முடிக்கிலும் உறைப்புக்கடைகள் உருவெடுத்திருப்பது உவகை ஊட்டுகின்ற விடயமாகும். இருந்த போதும் இந்த உறைப்புக் கடைகள் சுத்தம் சுகாதாரம் பேணி மக்களுக்கு சிறந்த பண்டங்களை வழங்குகின்றதா என்பது கேள்விக்குறியாகும். உண்மையில் அவர்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் நோன்பாளிகள் நோன்பு திறக்கும் போது பயன்படுகின்றதா? அல்லது அவர்களால் துவம்சிக்கப்படுகின்றதா என்பதனை ஒவ்வொரு கடை உரிமையாளர்களும் நன்கு சிந்திக்க வேண்டும்.
வெறுமனே தங்கள் வருமானத்திற்காக அல்லது தங்களின் பொருட்கள் எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக "அவர்களால் விற்பனை செய்யப்படாத உறைப்புப் பண்டங்களை மீண்டும் மறு நாள் எண்ணையில் வெதுப்பி அதனை விற்பனை செய்கின்றார்கள்". ஆனால் நோன்பாளிகள் அது இன்று உற்பத்தியான உறைப்புப்பண்டம் என எண்ணி ஏமாந்து விடுகின்றார்கள். ரமழான் மாதத்தில் இப்படியான கைங்கரியங்களை கடை உரிமையாளர்கள் செய்வது ஏற்புடையதா? நோன்பாளிகள் பசித்திருந்து தாகித்திரிந்து இறுதியில் நோன்பு திறக்கும் போது அவர்களை அசொளகரியதிற்கு உள்ளாகுவது எவ்வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்.
மேலும் சில உறைப்புக்கடைகள் தங்கள் பண்டங்களை உற்பத்தி செய்து வீதியோரங்களில் திறந்த கண்ணாடிப்பெட்டியில் வைத்துள்ளனர். இதனால் வீதியால் பயணம் செய்யும் வாகனங்களின் புகைகளும், இன்னும் அதனால் ஏற்படும் புழுதிகளும் இதில் படிகின்றது.
எனவே புனித ரமழான் மாதத்தில் வியாபாரிகள் தங்களின் பொருட்களில் கலப்படம் செய்யாது சுத்தமானவைகளை வழங்குவது அவர்களின் மீதுண்டான கடமையாகும். எனவே தங்களின் வருமான நிலையினை மட்டும் கருத்திற் கொள்ளாது நோன்பாளிகளின் தேவைகளை நிறைவு செய்து கொள்ளவும் தயாராக வேண்டும். எனவே ரமழான் மாதத்திலாவது தங்கள் பொருட்களில் கலப்படம் செய்யாது தரமான பொருட்களை விநியோகித்தால் அல்லாஹ்வின் பறக்கத் கிடைக்குமல்லவா?

திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
ReplyDelete