யாழ்ப்பாணத்தில் சிசு திரிய புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பம்
(பாறூக் சிகான்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் வட மாகாண ஆளுனரின் ஆலோசனையுடன் வறிய பாடசாலை மாணவர்களுக்கான அறிமுகப்படுத்தப்பட்ட சிசு திரிய புலமைப்பரிசில் திட்டம வழங்கும் நிகழ்வு இன்று 15-07-2013 யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 5;;00 மாணவர்களுக்கு தலா 5000ரூபா பெறுமதியான வங்கிப்புத்தகம், உண்டியல் ,பாடசாலை உபகரணம் போன்றன அதிதிகளால் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மஹிந்த ஹத்துறுசிங்க, 521 ஆவது பிரிகேட் கட்டளை தளபதி ஏ.பி பல்லேவல,சம்பத் வங்கியின் பிராந்திய முகாமையாளர் சங்கர், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் ரெமிடியஸ், மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள. கலந்து கொண்டனர்.



Post a Comment