Header Ads



வடமாகாண சபை தேர்தலில் பொதுச்சின்னத்தில் போட்டியிட விருப்பம்..!


வடமாகாண  சபைத் தேர்தலில் அதிக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட தமது விருப்பங்களை வெளிப்படுத்தியுள்ளன.

முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலர் இதுதொடர்பில் வன்னிமாவட்ட ஹுனைஸ் எம்.பி.யுடன் இதுதொடர்பில் உத்தியோகபூர்வமற்ற தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஆராயவுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

வடமாகாண தேர்தலில் அதிக முஸ்லிம் பிரதிநிதிகளை பெறுவதற்காக எத்தகைய தியாகத்தையும், விட்டுக்கொடுப்பையும் மேற்கொள்ள தயாராகவிருப்தாக அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜப்னா முஸ்லிம் இணையமூடாக பகிரங்க அறிவிப்புச் செய்திருந்தார்.

இந்நிலையில் வடமகாண தேர்தலில் அதிக முஸ்லிம் பிரதிநிதிகளை பெறுவதகாக விட்டுக்கொடுப்புகளை செய்ய தயாரென ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்களிடமிருந்து ஹுனைஸ் எம்.பி.க்கு தெளிவான சமிக்சை கிடைத்துள்ளதாகவும் அறியவருகிறது.

வடமகாண தேர்தலில் முழுவதும் ஒரணியின் கீழ் போட்டியிடுவது சாத்தியமற்ற போதிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் இருதரப்பினரும் இணைந்து போட்டியிடுவதன் மூலமே முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெறுவது சாத்தியம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

7 comments:

  1. masha allah if it is done it great start

    ReplyDelete
  2. அதாவது ஒழுங்க செய்ங்கப்பா..!!!!

    ReplyDelete
  3. இதுவும் அரசாங்கத்தின் ஒரு திட்டமாக இருக்கலாம். இவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று அவர்களின் எஜமானர்களுக்கு தாரைவார்த்து கொடுத்து விடுவார்கள். யா அல்லாஹ்! அநியாயக்கார ஆட்சியரர்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பாத்து காப்பாயாக.

    ReplyDelete
  4. எமது சமூகத்தின் எதிர்ப்பார்ப்பு அதுதான் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Mash Allah.. what a gr8 move..may allah reward them and unite them... better if they do same in wsyamba and central.Then insha sllah will get more seats...

    ReplyDelete
  6. All commencement from your side is good. We, the poor people might be happy on your concepts, so we cast votes you as you planned, but you muslim politicians, easily forget everything and sell those votes without any benefits of our community unless your selfishness only consist there. So, all of you keep truthfull to your helping community until next election. Isn't it so????

    ReplyDelete

Powered by Blogger.