காத்தான்குடி அல்-மனார் பள்ளிவாயலில் தினமும் 'ஸஹாபாக்கள் வரலாறு' நிகழ்வு
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் மஸ்ஜிதுல் ஹைதரி பள்ளிவாயலில்; இன்று புதன்கிழமை முதல் புனித றமழான் மாதம் ஒவ்வொரு தினமும் லுகர் தொழுகையைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் 'ஸஹாபாக்கள் வரலாறு' எனும் 'உத்தம நபித் தோழர்களின் உயரிய வாழ்க்கை வரலாறு' உள்ளிட்ட இஸ்லாமிய வரலாற்று சம்பவங்கள் காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட அறபு மொழி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான்(அப்பாஸி) இனால் நிகழ்த்தப்படவுள்ளது.
தினமும் இடம்பெறவுள்ள இவ்வுரையில் இஸ்லாத்திற்காக பாடுபட்ட முக்கிய ஸஹாபாக்கள் மற்றும் நபியவர்களின் காலத்தில் இடம்பெற்ற சில முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் என்பன இடம்பெறவுள்ளன.
இதேவேளை குறித்த பள்ளிவாயலில் இரவுத் தொழுகை(தராவீஹ்) அல்ஹாபிழ் ஏ.பீ.எம்.மசூத் பலாஹியினால் நேற்றிரவு முதல் நடாத்தப்பட்டது.
இரவு 09.00மணி இஷா தொழுகை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 09.15மணிக்கு இரவு நேர தராவீஹ் தொழுகை நடாத்தப்படும்.பின்னர் பயான் நிகழ்வு மற்றும் தேநீர் விநியோகம் என்பன இடம்பெறும்.
குறித்த இரவு வணக்கங்களில் பெண்களும் கலந்து கொள்வதற்குரிய சகல ஏற்பாடுகளும் மேல்மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு தினமும் அஸர் தொழுகையைத் தொடர்ந்து பி.ப. 5.00 மணிவரை 'குர்ஆன் ஹல்கா' எனும் அல்குர்ஆனை திருத்தமாக ஒதும் பயிற்சி வகுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வனைத்து நிகழ்வுகளிலும் தவறாது கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்'
செயலாளர்:- ஏ.எல்.எம்.மும்தாஸ்(மதனி)
அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி
கடற்கரை வீதி
காத்தான்குடி

Post a Comment