இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய வரலாறு தொடாபான கருத்தரங்கு
(இக்பால் அலி)
பேராதனை பல்கலைக்கழக கற்கை நெறிப் பிரிவின் விரிவுரையாளர்கள் மற்றும் கண்டி போரம் அமைப்பினர் இணைந்து இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய வரலாறு தொடாபான கருத்தரங்கு ஒன்று கண்டி வை எம். எம். ஏ மண்டபத்தில் 09-06-2013 இன்று நடைபெற்றது.
பேராதனை பல்கலைக்கழக பல் வைத்தியத்துறையின் விசேட நிபுணத்துவ வைத்தியப் பேராசிரியர் எம். ஏ. எம். சித்தீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட வளவாளராக புருணைன் பல்லைக்கழகப் பேராசிரியர் ஹுஸைன்மியா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அத்துடன் பேராதனை பல்கலைக்கழக மெய்யியல்துறைப் பேராசிரியர் எம். எஸ். எம் அனஸ், போரதனை பல்கலைக்கழக சிரேஷ;ட விரிவுரையாளர் சுமதி சிவமோகன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இதில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள். புத்திஜீவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment