Header Ads



புத்தளம் கரைத்தீவில் பள்ளிவாசல் திறப்பு


(இக்பால் அலி)

ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவினால் 80 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புத்தளம் கரைத்தீவு, பொன்பரப்பி ஜாமிஉல் இஹ்லாஸ் இறை இல்லத் திறப்பு நிகழ்வும் இப்தார் விசேட மார்க்கச் சொற்பொழிவும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை முதல் இப்தார் நிகழ்வு வரை நடைபெற்றது.

இந்நிகழ்வில் விசேட குத்பாப் பேருரையினை ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவின் பொதுத் தலைவர்  அஎன். பீ. எம். அபூபக்கர் சித்தீக் (மதனி) நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து  என். பீ. ஜுனைத் காஸிமி மதனி, செய்தீன் எஸ். பரீத் ஆகியோர் பங்கேற்றனர். 

1 comment:

  1. அல் ஹம்துலில்லாஹ் நல்ல விடயம்தான் நாம் எதையும் இனிமேல் மறைத்தோ பொதுபலசேனா என்ன சொல்லுமோ என்றெல்லாம் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை இது பெளத்த நாடு நாம் அனைவரும் ஒத்துக்கொள்கின்றோம் ஆனால் அனைத்து இனமக்களும் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழக்கூடிய வகையில் அனைவருக்கும் உரிமையுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.