தெல்தோட்டையில் நீர் தாங்கிகள் கையளிப்பு
(இக்பால் அலி)
தெல்தோட்டை பள்ளேகம ஜம்மியதுல் ஹைரிய்யதுல் இஸ்லாமிய அமைப்பின் ஏற்பாட்டில் தெல்தோட்iடைப் பிரதேசத்தில் தண்ணீரினால் கஷ;டம்படும் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு நீர் தாங்கிகள் கையளிக்கும் நிகழ்வு 13-007-2013 நடைபெற்றது.
அஷ;nஷய்க் எம். எஸ்.எம். முனீர் மற்றும் எம். எஸ்.எம். முபஸ்ஸீர் இரு சகோதரர்களின் வேண்டுகோளின் பிரகாரம் டுபாய் நாட்டைச் சேர்ந்த அஹ்மத் கலப் அவர்களின் நிதி உதவியின் கீழ் இந்த நீர் தாங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
தெல்தோட்டை, கலஹா, ரலிமங்கொட, பத்தாம்பள்ளி, முஸ்லிம் கொலனி, மெதகேகெல உள்ளிட்ட கிராங்களைச் சேர்ந்த 65 குடும்பங்களுக்காக இந்த நீர்த் தாங்கிகள் விநியோகிக்கப்பட்டன.

Post a Comment