Header Ads



கல்முனையில் 'ஒசுசல' நிலையத்தை திறக்க பிரதேச மக்கள் கோரிக்கை

(எம்.எம்.ஏ.ஸமட்)

கல்முனையில் 'ஒசுசல' நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்முனைப் பிரதேச மக்கள் பிரதிநிதிகளிடம்   பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இக்கோரிக்கை தொடர்பில் பிரதேச மக்கள் தெரிவித்ததாவது,

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நோயாளர்கள் கல்முனை வடக்கு தள வைத்தியசாலை மற்றும் கல்முனைத் தெற்கு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை என்பவற்றுக்கு தினம் சிகச்கைக்காக வருகின்றனர். இருப்பினும், ஒரு சில மருந்து வகைகள் இவ்வைத்தியசாலைகளில் கையிருப்பில் இல்லாத நிலையில் தனியார் மருந்தகங்களில் பெற்று வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 

இந்நாட்டில் இலவச சுகாதார வசதி; பொது மக்களுக்க வழங்கப்படுகின்ற போதிலும், அரச வைத்தியசாலைகளுக்கு இலவச சுகாதார வைத்திய வசதியைப் பெற வரும் நோயாளர்கள் அதிக விலை கொடுத்து மருந்துப் பொருட்களை வாங்க வேண்டிய துரஷ்டவசமான சூழ்நிலைக்கு ஆளாகின்றனர்.

இப்பிரதேச தனியார் மருந்தகங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மருந்துப்பொருட்களின் விலைகள் மருந்தகத்துக்கு மருந்தகம் வேறுபட்டுக் காணப்படுவதனால் மக்கள் அவற்றைக் கொள்வனவு செய்வதில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை உருவாகிறது.

அரச மருந்தாக்;கல் கூட்டுத்தாபனத்தின் 'ஒசுசல' விற்பனை நிலையம் நாட்டின் பல பாங்களிலும் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு மருந்துப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் இவ்விற்பனை நிலையம் இதுவரை திறந்து வைக்கப்படவில்லை. இந்த வசதியை இப்பிரதேச மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க இப்பிரதேச மக்கள் பிரதிநிதிகள் இதுவரை சிந்தித்தாகத் தெரியவுமில்லை.

கல்முனைப் பிரதேச மக்கள் பிரதிநிதிகள் மக்களின் முக்கிய தேவைகளைக் கண்டறியாது தேவையற்ற பல அபிவிருத்திப் பணிகளுக்காக அடிகல் நடுகின்றனர்.  இதனால் இப்பிரதேசத்தின் மக்கள் எதிர்நாக்கும் முக்கிய தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படாது கிடப்பில் போடப்படுவதாகக் குறிப்பிடும் கல்முனைப் பிரதேச மக்கள,; கல்முனைப் பிரதேசத்தில் ;ஒசுசல' விற்பனை நிலையமொன்றைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை முன்வைப்பதாக அதரிவிக்கின்றனர்

No comments

Powered by Blogger.