Header Ads



48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு - இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 7 மில்லியன் மேலதிக வருமானம்

(எம்.எம்.ஏ.ஸமட்)

ஒருங்கிணைந்த ரயில் ஊழியர் தொழில்சங்க முன்னணியினால் கடந்த திங்கட் கிழமை மேற்கொள்ளப்பட்ட 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பினால் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு 7 மில்லியன் ரூபா மேலதிக வருமானமாகக் கிடைக்கப்பெற்றுள்ளது.

ருயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்புத் தினமான கடந்த 8ஆம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபையினால் வழமையிலும் பார்க்க மேலதிகமாக 300 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இ.போ.ச. வின் பிரதம இயக்குனர் அதிகாரி எச்.எம். சந்திரசிறி தெரிவிக்கின்றார். இதனால் நாளாந்தம்; 53 மில்லியன் ரூபாவை வருமானமாக பெறும் இ.போ.ச. அன்றைய தினம் 60 மில்லியன் ரூபாவை  வருமானமாகப் பெற்றுள்ளது.

இ.போ சபையினால் நாடு பூராகவும் தினமும் 4400 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றபோதிலும் அன்றைய தினம் 4700 பஸ்கள் சேவையில் ஈடுபடுததப்பட்டதகவும் இதனால் பொது போக்குவரத்து பயணிகளின் போக்குவரத்து நெருக்கடிகள் ஓரளவு தவிர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இதேவேளை தனியர் போக்குவரத்து பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன் (11) மேற்கொண்ட பணிபகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு தனியர் போக்குவரத்து பஸ் உரிமையாளர்கள் சங்கம் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவில்லையெனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.