'கோட்டபய ராஜபக்ஸ தொடர்பில் கேலிச்சித்திரங்கள் வெளியாவதில்லை'
சில தனியார் ஊடகங்கள் அரசாஙகத்திற்கு அஞ்சி செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தங்களது இருப்பினை உறுதி செய்யும் நோக்கில் சில தனியார் ஊடகங்கள் அரசாங்கத்தின் கருத்துக்களை போற்றி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஊடகவியலாளர் தொழில் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான பத்திரிகையொன்று தற்போது கூட்டமைப்பிற்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருவதாக சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ச்சியாக இயங்க வேண்டுமாயின் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதனை தவிர வேறு வழயில்லை எனவும், இதனால் குறித்த ஊடகம் கூட்டமைப்பிற்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட அநேக ஊடக நிறுவனங்கள் அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் தொடர்பில் கேலிச்சித்திரங்கள் வெளியாவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். gtn
.jpg)
Post a Comment