யாழ்ப்பாணத்தில் இரவு விபத்துக்கள் அதிகரிப்பு - பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த சில்வா
(பாறூக் சிகான்)
இரவு நேர விபத்துக்கள் வீதி ஒழுங்கு முறை,சாரதிகளின் கவனயீனங்களால் பெரும்பாலும் இடம்பெறுவதாக யாழ் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த சில்வா தெரிவித்தார். யாழ் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர்களை சந்திக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொதுவாக யாழ்ப்பாணத்தில் இரவு நேர விபத்துக்கள் அதிகமாக இடம்பெறுகின்றன.இரவு வேளையில் வாகனத்தில் செல்வோர் கறுப்பு நிற உடைகளை அணிகின்றனர்.இதனால் முன்னால் செல்வோர் குறித்து பின்னால் வருவோருக்கு தெரியாது.இதை விட துவிச்சக்கரவண்டி விபத்தும் அதிகமாக உள்ளது.
இவ்வாறான விபத்துக்களை குறைக்க துவிச்சக்கரவண்டிகளுக்கு ஒளித்தறிப்பு ஸ்டிக்கர்களை ஒட்டவுள்ளோம்.தற்போதுள்ள காபட் வீதியினால் விபத்து ஏற்படுகின்றதாக அறிகின்றோம். இதனை தடுக்க எம்மால் பல செயற்பாடுகள் முன்னெடுக்கபடுகின்றன.மேலும் ஒவ்வொரு மாதமும் வீதி பாதுகாப்பு அதிகார சபையுடன் இணைந்து யாழ் பொது நூலகத்தில் கருத்தரங்கு ஒன்றினை மேற்கொண்டுள்ளோம். இதற்கு ஊடகங்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.

Post a Comment