மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் இன நல்லுறவைப் பேணும் இப்தார் நிகழ்வு
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் இன நல்லுறவைப் பேணும் வகையிலான வருடாந்த புனித நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.பாக்கியராசா தலைமையில் நடைபெற்றது.
ஓட்டமாவடி அல்கிம்மா சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக அல்கிம்மா சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் சவூதி அரேபிய பணிப்பாளர் அஷ்ஷெய்க் அபூ ஹுஸாம், ,விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்,ஸ்ரீ.ல.மு.கா காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா, அல்கிம்மா சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் ஓட்டமாவடிக் கிளைப் பொறுப்பதிகாரி எம்.எஃப்.எம்.ஹாறூன்(ஸஹ்வி),மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்வியற் கல்லூரி உப பீடாதிபதிகள் ,விரிவுரையாளர்கள், கல்விக் கல்லூரி மாணவ மாணவிகள் ,ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகளின் உரை இடம்பெற்றதுடன் மாணவ மாணவிகளின் விசேட நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment