பொத்துவில் பிரதேசசபை வழங்கிய நியமனங்களை உடனடியாக ரத்துச்செய்ய உத்தரவு
உள்ளுராட்சி சபைகளுக்கான ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு முற்றிலும் முரணான வகையில் பொத்துவில் பிரதேச சபையினால் அண்மையில் வழங்கப்பட்ட பொதுமக்கள் தகவல் உத்தியோகத்தர் நியமனங்களை உடனடியாக ரத்துச் செய்யுமாறு பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளருக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்
பொத்துவில் பிரதேசத்தில் 'யுனொப்ஸ்' நிறுவனத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் திண்மக்கழிவு முகாமைத்துவத் திட்டத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் வகையில், பொத்துவில் பிரதேச சபையானது பொதுமக்கள் தகவல் உத்தியோகத்தர் ஆகிய பதவிக்கு நியமனங்களை அண்மையில் வழங்கிருந்தது.
ஆனாலும், குறித்த இந் நியமனம் உள்ளுராட்சி சபைகளுக்கான ஆட்சேர்ப்பு முறைமைக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்து - அந்த நியமனங்களை உடனடியாக ரத்துச் செய்யுமாறு 21 ஜுன் 2013 எனும் திகதிடப்பட்ட கடிதமொன்றின் மூலம் பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளருக்கு - கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
பொத்துவில்பிரதேச சபைத் தவிசாளருக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தங்கள் பிரதேச சபையினால் வழங்கப்பட்ட, 'யுனொப்ஸ்' நிறுவனத்தின் அனுசரணையுடனான திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான - பொதுமக்கள் தகவல் உத்தியோகத்தர் நியனமனத்தின் போது ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு முரணான பின்வரும் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
01) மேற்படி பதவிகள் பிரதேச சபையின் ஆளணியில் உள்ளடக்கப்படாத போதும், அந் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
02) மேற்படி பதவிகள் நியமனம் தொடர்பாக ஆளுநர் மற்றும் விடய அமைச்சரான முதலமைச்சரின் அனுமதி பெறப்படவில்லை.
03) ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு அமைவாக விண்ணப்பங்கள் கோரப்படவில்லை. மேலும், முறையான நேர்முகப்பரீட்சை ஊடாக குறிப்பிட்ட நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
04) பொத்துவில் பிரதேச சபை வயதுக்கு புள்ளி இட்டு ஆட்சேர்ப்பு செய்தமை .
05) E - கோட் சட்டத்தின் மூலம் இல்லாமல் செய்தமை etc ......
எனவே, ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு முற்றிலும் முரணான வகையில் வழங்கப்பட்ட மேற்படி பொதுமக்கள் தகவல் உத்தியோகத்தர் நியமனத்தை உடனடியாக ரத்துச் செய்து, பொருத்தமான ஆட்சேர்ப்புத் திட்டம் மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகளைப் பின்பற்றி குறித்த நியமனத்தை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் - என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment