Header Ads



அல்குர்ஆன் மனனம், ஆங்கிலக் கட்டுரைப் போட்டியிலும் காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் தேசிய மட்டத்திற்கு தெரிவு


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தேசிய மீலாத் விழா போட்டியில் அல்குர்ஆன் மனனம் ஆரம்பப் பிரிவிலும் ஆங்கிலக் கட்டுரைப் போட்டியிலும் காத்தான்குடியைச் சேர்ந்த இருவர் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

காத்தான்குடி மீரா பாலிகா மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம்04 மாணவன் முஹம்மட் அனஸ் முஹம்மட் அஸ்ரி ஆங்கிலக் கட்டுரைப் போட்டியிலும்,மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் உயர்தரப் பாடசாலை தரம்05 மாணவி பழுளுல்லாஹ் பாத்திமா பஸ்ஹானா அல்குர்ஆன் மனனம் ஆரம்பப் பிரிவிலும் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை காத்தான்குடி மீரா பாலிகா மஹா வித்தியாலய மாணவிகளான ஆங்கிலப் பேச்சில் மாகாண மட்டத்தில்; இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். சிங்கள வரலாற்றுப் போட்டியில் காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.எஸ்.எப்.சிப்ரா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.




No comments

Powered by Blogger.