Header Ads



ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவன் முஹம்மது நஸீம் சாதனை


(அபூ பயாஸ்)

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை (க .பொ .த) சாதாரணதர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் அப்துல் சலாம் முஹம்மது நஸீம்  இன்று(05-07-2013) திருகோணமலை மனித வள முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்ற  "தேசிய புத்தாக்குனருக்கான"மாகாணமட்ட  போட்டியில் மட்டக்களப்பு மத்திவலயத்தில் ஒரே ஒரு சாதனை வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப்போட்டி நிகழ்வில் மாகாண ரீதியாக 300 போட்டியாளர்கள் பங்குபற்றிய போதும்,30 பேர் மட்டுமே புதிய ஆக்குனர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அதிலும் மட்டக்களப்பு மத்தி வலயத்தில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவனான ASM .நஸீம் தெரிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாணவன் மிகக் குறைந்த செலவிலும்,மிகக் குறைந்த மின் பாவனையினாலும் இறு  வெட்டுக்களை(CD ) பயன்படுத்தி சிறிய மின் விசிறி (FAN ) ஒன்றினை செய்து காட்டி புத்தாக்குனராக  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2 comments:

Powered by Blogger.