அமைச்சர் அதாவுல்லாவினால் கொழும்பு மாநகர சபைக்கு நவீன வாகனங்கள் கையளிப்பு
(ஜே.எம். வஸீர்)
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கீழ் இயங்கும் பாரிய கொழும்பு கழிவுநீர் முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் கொழும்பு மாநகர சபைக்கு கழிவு நீர் முகாமைத்துவத்திர்க்காக 275 மில்லியன் ரூபா பெறுமதியனா வாகனங்கள் மற்றும் நவீன இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஸ ஆகியோர் கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களிடம் வாகனங்களையும், இயந்திரங்களையும் உத்தியோகபூர்வமாக கையளிப்பதனை படத்தில் காணலாம்.
இந்நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க, மேலதிக செயலாளர் ஏ. அப்துல் மஜீத் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Post a Comment