Header Ads



அட்டாளைச்சேனையில் மோட்டார் சைக்கிள் விபத்து - ஒருவர் மரணம், ஒருவர் காயம்

(ரீ.கே.றஹ்மத்துல்லா)

அட்டாளைச்சேனையில் இன்று (07) காலை 6.00மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றவர் காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி இருவருடன் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதான வீதியின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதுண்டதில் பின் இருக்கையில் இருந்து வந்தவரின் தலை பலமாக மின்கம்பத்தில் மோதுண்ட நிலையில் அவ்விடத்திலேயே பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.

மரணமானவர் சம்மாந்துறை சவளகக்டை கிராமத்தைச் சேர்ந்த மஹ்றூப் சுமார் 32 வயது மதிக்கத்தக்கவர் என்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மற்றவர் செங்கலடியைச் சேர்ந்த லுகிதரன் 29 வயது. இவர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மரணமானவரின் சடலம் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments

Powered by Blogger.