Header Ads



வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தொடர்பில் கண்காணிப்பு..!

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வின் போது செய்தி சேகரிப்பில் ஈடுபடும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் குறித்த செய்திகளை சேகரிப்பதற்காக 700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். உள்நாட்டு ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் உள்ளடங்களாக மொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இந்த நிகழ்வு பற்றிய செய்தி சேகரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வீசா வழங்கும் நடவடிக்கை அடுத்த வாரமளவில் ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார். சில ஊடகவியலாளர்கள் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறானவர்களினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளிலிருந்து விஜயம் செய்யும் சகல ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் முழுமையாக ஆராய்ந்தன பின்னரே வீசா வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற போதிலும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் இணக்கப்பாடுகளை எற்படுத்திக்கொள்ளத் தயாரில்லை என அவா சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படும் என கருதப்பட்டால் இறுதி நேரத்தில் கூட வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் வீசாக்கள் ரத்து செய்யப்படக் கூடுமென அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். gtn

1 comment:

  1. There is no value of your says as you are a mouth piece of MR & CO. First control your son. Dont talk nonsense

    ReplyDelete

Powered by Blogger.