'வடமாகாண தேர்தலில் ஐ.ம.சு.மு. முதலமைச்சர் வேட்பாளரொருவரை முன்னிறுத்தாது'
(Vi) வட மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முதலமைச்சர் வேட்பாளரொருவரை முன்னிறுத்தப் போவதில்லை என்று முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.
முன்னணி வேட்பாளர் விண்ணப்பங்களை கோரியுள்ளதாக தெரிவிக்கும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதுவரை கே.பி. என்ற குமரன் பத்மநாதனோ அல்லது புலிகளின் அரசியல் துறை மகளிரணித் தலைவியாகவிருந்த தமிழினியோ வேட்பாளர்களுக்காக விண்ணப்பிக்கவில்லை எனவும் தயாநிதி என்ற தயாமாஸ்டர் வேட்பாளருக்கான விண்ணப்பத்தை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வட மாகாணசபைத் தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையாளருக்கு உத்தியோகபூர்வமாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு இன்னும் ஒரு சில தினங்களில் முடிவடைந்துவிடுமெனவும் இது தொடர்பாக அமைச்சர்களான ரிஷாத் பதியூதீன் மற்றும் டக்ளஸ் தேவானந்த உட்பட இடதுசாரிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வட மாகாண சபை வேட்பாளர்களை தெரிவு செய்யும் குழுவின் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார்.
.jpg)
Post a Comment